புதுப்பிப்பு 17-06-2020: உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள், கட்டாரில் வீட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய கையேட்டை இப்போது இங்கே கிடைக்கிறது. ஆதாரம்: ADLSA அமைச்சு

ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் குடிவரவு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்புடைய விடயங்கள் உள்ளடங்கலாக கட்டாரின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகள், விதிமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றிய தகவல்களை ஹுகூமி நேரலை அரச ஈ கடவை வழங்கிவருகின்றது. அத்துடன் ஆங்கிலம், அரபு, ஹிந்தி, நேபாளி மற்றும் பிலிப்பைன்ஸ் மொழிகளில் குறிப்பாக கட்டாரில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை இலக்காகக்கொண்ட தகவல்கள் மற்றும் சேவைகளை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹுகூமி வழங்குகின்றது. புதிதாக கட்டாருக்கு வருகை தருபவர்களுக்கு விசேடமாக விரும்பத்தக்க கற்றல் கருவியொன்றாக அழைக்கப்படுகின்ற ‘‘அழகாக, பாதுகாப்பாக இருங்கள்’’ என்பது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் நாளாந்த தொழில் வாழ்க்கையில் பயனுள்ள தகவல்களை வழங்குவதாக  அமைந்துள்ளது. கட்டாரில் அவசர நிலைமைகளின்போது பயனுள்ள தொடர்பாடல் இடங்களையும் மற்றும் தூதரகங்களின் பட்டியலையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். புதிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வழிகாட்டல்களையும் இந்தக் கடவை ஊடாக நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த வழிகாட்டல்கள் மற்றும் தற்போதைய இலக்கியத்தின் அடிப்டையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பின்வரும் குறிப்புகளைத் தயாரிக்கலாம்;

  • அங்கீகரிக்கப்பட்ட அனுசரணை முகவர் ஒருவரைக் கண்டுபிடிக்காமல் கட்டாருக்கு புலம்பெயர வேண்டாம்.
  • உங்களுடைய பயண மற்றும் / அல்லது அடையாள ஆவணங்களை முதலாளிமார் மற்றும் / அல்லது அனுசரணையாளர்கள் பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டாம்.
  • புதியதொரு வேலையைத் தொடங்கும்போது மூன்று வேலைவாய்ப்பு உடன்படிக்கைகளை தொழில் உறவுகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும். உங்களிடம் ஒரு மூலப் பிரதியை வைத்திருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
  • ஒரே முதலாளியிடம் தொடர்ந்து மூன்று மாதங்கள் வேலை செய்த பிற்பாடு நீங்கள் சுகவீன விடுமுறை பெறுவதற்கு உரித்துப் பெறுவீர்கள்.
  • ஒரு நாளைக்கு சாதாரண வேலை நேரம் எட்டு மணித்தியாலங்கள், ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்களை அதிகரிக்காமல் மேலதிக நேர வேலை வழங்கப்படல் வேண்டும்.
  • பகுதிநேர வேலையிலீடுபடும் தொழிலாளர்களைத் தவிர, சகல தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு கிழமையிலும் வெள்ளிக்கிழமை ஓய்வு நாளாக அமையும்.

கட்டாரில் புலம்பெயர் தொழிலாளர் என்ற வகையில் உங்களுடைய உரிமைகள் மற்றும் கடமைகளை இந்த குறுந்திரைப்படம் சுருக்கமாக எடுத்துக்காட்டுகின்றது.

பொதுவான வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக விசேடமான குழுக்களை இலக்காகக்கொண்ட ஏனைய மூலங்களும் உள்ளன.  உதாரணமாக ச.தொ.தா கட்டாரில் இந்திய தொழிலாளர்களுக்கு (ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு), பங்களாதேச தொழிலாளர்களுக்கு, குறைந்த மற்றும் அரைகுறை திறன்வாய்ந்த தொழிலாளர்களை இலக்காகக்கொண்டு சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை ஒழித்தல் மற்றும் பாதுகாத்தல் மீது கவனம் செலுத்துகின்றன. அதேபோல கட்டாரில் வாழ்தல் மற்றும் வேலைசெய்தல் பற்றிய விரிவான தகவல்கள்  OFW இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. விசேடமாக பல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக கட்டார் சுகாதார பராமரிப்பு பயிற்சியாளர்களுக்கான கவுன்சில் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.