2015 சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன அறிக்கையின்படி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) நாடுகளில் கத்தாரும்  உள்ளது, இதில் தற்போது  திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் இருப்பதனால் குறைந்த திறமையான தொழிலாளர்களுக்ககான தேவை அதிகரித்து உள்ளது. கட்டாரில் குடியேறிய தொழிலாளர்களில் 60% க்கும் அதிகமானோர் இடைநிலைக் கல்வியை முடிக்கவில்லை.

 

கட்டாரில், பிற ஜி.சி.சி நாடுகளைப் போலவே, புலம்பெயர்ந்த தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஒரு பெரிய துறையாகும். சட்டங்களைப் பொருட்படுத்தாமல், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆட்சேர்ப்பு செலவுகள் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாகவே இருக்கின்றன. அதிகரிக்கும் ஒழுங்குபடுத்தப்படாத ஆட்சேர்ப்பு செலவுகள் பிற சட்டவிரோத நடைமுறைகளுக்கும் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கும் இடமளிக்கின்றன.

 

1990 கள் மற்றும் 2000 களின் முற்பகுதியில், கத்தார் மற்றும் பிற ஜி.சி.சி நாடுகளில் குடியேறிய தொழிலாளர்கள் மற்ற அரபு நாடுகளிலிருந்தே வந்தனர், இப்போதெல்லாம், ஆசியாவில் இருந்தே அதிகளவில் வருகின்றனர். இவர்கள்  "அதிக கீழ்ப்படிதல்," "குறைந்த விலை" மற்றும் "நிர்வகிக்கக்கூடியவர்கள்" என்று கருதப்படுகிறார்கள். பெரும்பாலான ஆசிய தொழிலாளர்கள் பொதுவாக சார்புடையவர்கள் இல்லாமல் வந்து குடியேறுகிறார்கள் ஆனால்  அரபு தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வருவதற்கும் நிரந்தர குடியேற்றத்தை நோக்கமாகக் கொண்டே வருகின்றனர். ஆசிய தொழிலாளர்களின் உணர்வுகள் ஆட்சேர்ப்பு செயல்முறையில் பெரும் பங்கு வகிக்கின்றன எடுத்துக்காட்டாக, பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் தங்கள் ஆங்கிலத் திறன் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள பயிற்சி அமைப்புகளின் நல்ல பெயர் காரணமாக நிர்வாக பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் என்று முதலாளிகள் எதிர்பார்க்கலாம்.

 

இதேபோல், பாகிஸ்தானியர்கள் நல்ல ஓட்டுநர்கள் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளனர், இந்தியர்கள் திறமையான உழைப்பாளர்களாக கருதப்படுகின்றனர், எத்தியோப்பியர்கள், வியட்நாமியர்கள் மற்றும் கம்போடியர்கள் குறைந்த ஊதியத்திற்காக பணியாற்ற தயாராக இருப்பதாக கருதப்படுகின்றனர்.

 

கத்தார் உள்ளிட்ட ஜி.சி.சி நாடுகளில், ஆட்சேர்ப்பு என்பது கஃபாலா (அனுசரணை / ஸ்பான்சர்ஷிப்) முறையால் இயக்கப்படுகிறது, இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பான்சரைக் கொண்டிருக்க வேண்டும். உத்தியோகபூர்வமாக, பயண ஆவணங்களை பறிமுதல் செய்வதை கத்தார் தடைசெய்கிறது; இருப்பினும், சில ஸ்பான்சர்கள் புலம்பெயர்ந்தோரின் பாஸ்போர்ட்களைக் கோரலாம். கத்தார் நாட்டில் குறைந்த வருமானம் உடைய தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்திருப்பதை ஐ.எல்.ஓ தனது 2013 ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது சுதந்திரமாக நடமாடுவதற்கும் தடையாக இருக்கிறது மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது முதலாளிமார் ஒரு அடக்குமுறையை விதிக்கவும் எதுவாக அமையும். துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் பிற மாறுபாடுகளைப் போலவே, கஃபாலா அமைப்பின் எதிர்மறையான விளைவுகளும் திறமையான தொழிலாளர்களைக் காட்டிலும் குறைந்த திறமையான தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் ஆபத்தானவை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு.

 

கஃபாலா முறை அரச சார்ப்ற்ற மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளால் மிகவும் விமர்சிக்கப்படுகிறது. கத்தார் அறக்கட்டளையின் சமீபத்திய அறிக்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிலைமைகளை கோடிட்டுக்காட்டுகின்றது, குறிப்பாக 2022 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு தேவையான முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பணிபுரிபவர்கள். அறக்கட்டளையின் 2014 அறிக்கை ஆட்சேர்ப்பு முறையில் பல சிக்கல்களை கொண்டிருப்பதாக எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, மேலே பட்டியலிடப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்களைப் பொருட்படுத்தாமல், இந்த பேச்சுவார்த்தைகள் தொழிலாளர் விநியோகத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றன, மேலும் ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் நெறிமுறை நடைமுறைகளின் தேவையை பெரும்பாலும் கவனத்திற்கு எடுப்பதில்லை. இரண்டாவதாக, மேலே குறிப்பிட்டுள்ளபடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கணிசமான ஆட்சேர்ப்பு செலவுகளை செலுத்த வேண்டுடி உள்ளது, இது சுமார் டாலர் $ 5,000 வரை ஆகும். மூன்றாவதாக, ஒப்பந்தக்காரர்கள் பெரும்பாலும் ஊழியர்களின் ஊதியத்தை நேரடியாகஅவர்களிடம் வழங்காமல் தொழிலாளர் வழங்கல் நிறுவனங்களுக்கு பணம் செலுத்துகிறார்கள், ஆட்சேர்ப்பு மற்றும் ஊதியv இன்னும் தெளிவற்றதாகவே விளங்குகின்றது. இறுதியாக, ஒப்பந்தங்கள், கையெழுத்திடப்பட்டால், அவை பெரும்பாலும் தொழிலாளர்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. அல்லது முன்னர் ஒப்புக்கொண்டதை விட குறைந்த ஊதியங்கள் yமற்றும் மோசமான நிலைமைகளுடன் மாற்றீடுகள் மூலம் மாற்றப்படுகின்றன. விசா வர்த்தகம் போன்ற சட்டவிரோத நடைமுறைகள் இன்னும் பொதுவானவையாகவே உள்ளது  என்பதால், சட்டத்தை  பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில்  கவனம் செலுத்துகின்றன.

 

எவ்வாறாயினும், கத்தார் அரசாங்கம் சமீபத்தில் 6 (ஆறு) படிகளை உள்ளடக்கிய கஃபாலா முறையை அகற்றுவதற்கான புதிய வழிகாட்டுதல்களையும்  கடமைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளன:

ப்பந்த மாற்றீட்டைத் தடுப்பதற்காக வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் அரசாங்கத்திடம் பதிவு செய்யப்படும், நாட்டிற்கு வரும் தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தைஅவரகள் அனுமதி இன்றி மாற்றி அமைக்கவும் வேதனைகளை குறைக்கவும் இயலாது.

 

முதலாளிகள் இனி தங்கள் ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியாது.

 

    குறைந்தபட்ச ஊதியம் அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய அடிப்படை வீதமாக நிர்ணயிக்கப்படும், இனம் சார்ந்த ஊதிய முறையை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

    அடையாள ஆவணங்கள் கத்தார் அரசினால் நேரடியாக வழங்கப்படும், மேலும் தொழிலாளர்கள் தங்கள் அடையாள அட்டையை பெற இனி தங்கள் முதலாளியை நம்பி இருக்க அவசியம் இல்லை, கத்தார் அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டை மூலம் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

    ஒவ்வொரு பணியிடத்திலும் தொழிலாளர் குழுக்கள் நிறுவப்படும், தொழிலாளர்கள் தங்கள் சொந்த பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

    புகார்களைக் கையாள்வதற்கான காலக்கெடுவைக் கொண்ட ஒரு சிறப்பு தகராறு தீர்க்கும் குழு புகார்களுக்கு விரைவான தீர்வை உறுதி செய்வதற்கான மையமாக இருக்கும்.

     

    ஐ.டி.யூ.சி உலகளாவிய உரிமைகள் குறியீட்டின் அடிப்படையில் இந்த நாட்டில் தொழிலாளர்கள் உரிமைகளுக்கான மரியாதை அளவைப் பற்றி மேலும் அறிய.