பின்வரும் விபரங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொருந்துகின்ற குறித்த தேசிய சட்டங்கள் பாதுகாப்பின் நிமித்தம் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கட்டுப்பாடுகளின் மீது ஆட்சேர்த்தலை ஒழுங்குபடுத்துகின்ற ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. (அவையாவன; புறப்படுவதற்கு முன்னைய பயிற்சி, காப்புறுதித் திட்டங்கள் போன்றன)

தொழிலாளர் இழப்பீட்டுக் (வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம்) (காப்புறுதி) கட்டளை 2005 (பீ.யூ. (ஏ) 45/05) 2005; வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் மரணித்தல் அல்லது காயமடைவதற்காக அத்தொழிலாளிக்கு வழங்கப்படவேண்டிய தொகையைச் செலுத்துவதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் கட்டளை, சபா. மலேசிய புலம்பெயர்வோரின் நிதிய சபைக் கட்டளைகள் 1966 இன் கீழான அறிவித்தல். புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கமர்துவதற்கு அனுமதிப்பத்திரம்பெற்ற முதலாளிமார்களைப் பதிவுசெய்யும் படிவத்தினை மாற்றியமைக்கின்றது. பணிக்கமர்த்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை, வீட்டு இடவசதிகளை வழங்கல் மற்றும் சம்பள அளவுகளை உள்ளடக்கிய தகவல்களை வழங்க வேண்டியுள்ளது.

வேலைவாய்ப்பு (கட்டுப்பாடு) சட்டம் 1968 (திருத்திய 1988); இது மலேசியர் அல்லாத பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரங்கள், பதிவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குகின்றது. உத்தியோகபூர்வ திருத்திய சட்டம் 1968.

குடிவரவு சட்டம் 1959/63 (சட்டம் 155); அது மலேசியாவிற்குள் குடியேறுவதற்கான பல்வேறு விதிமுறைகளின் அம்சங்களை ஒழுங்குபடுத்துகின்றது. 6 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி 1 பூர்வாங்க ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. பகுதி 2 மலேசியாவிலிருந்து புறப்படுதல் மற்றும் உள்வருதலை ஒழுங்குபடுத்துகின்றது. பகுதி 6 நானாவித ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.