சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதிலும் ஏமாற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பரலாக இடம்பெறுவதால் ஆட்சேர்ப்பு முகவர்கள் அனுமதிப் பத்திரத்தை தங்களிடம் வைத்திருப்பதை கோரப்படுகின்றனர். வாடகைக்கமர்த்துவதனை நிறுத்த முடியாத போக்கு காரணமாக 1995 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்காக ஆட்சேர்ப்பு முகவர்களை தடைசெய்வதனை மீண்டும் நீக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் ஒரு கொள்கையிலிருந்து பெறப்பட்ட வெளிவாரி நிறுவனங்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 50 இற்கும் குறைவான புலம்பெயர் தொழிலாளர்ளை பணிக்கமர்த்தும் கம்பனிகள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து நேரடியாகவாவது ஆட்சேர்த்தல் வேண்டும் அல்லது வாடகைக்கமர்த்தும் கம்பனிகளை நாடவேண்டும் என்று கொள்கை ரீதியாக வேண்டப்படுகின்றனர். மிகவும் வினைத்திறனான நெகிழ்ச்சியான ஆட்சேர்ப்பு முறையை அமைப்பதற்காக அரசாங்கத்தின் கொள்ளளவை தாண்டி மற்றும் கட்டணம் அறவிடுதல்களுடன் தொடர்புடைய துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான புதிய ஆட்சேர்ப்பு முறைமை வளர்ச்சியடைந்தது. இது வாடகைக் கம்பனிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் தொழில் அனுமதிப்பத்திரம் வழங்குவதனை இடைநிறுத்த வழி வகுத்த்து. 2013 இலிருந்து வாடகை முறை படிப்படியாக நீக்கப்பட்டது.

 

புலம்பெயர் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான முழுமையான பொறுப்பினை மனிதவளங்கள் அமைச்சு கொண்டுள்ளமையை கொள்கை மற்றும் நிலைமைகளின் மாற்றத்தினை பதினோராவது மலேசிய திட்டம் உறுதிசெய்கின்றது. வாடகை நிறுவனங்கள் மற்றும் ஏனைய இடைத்தரகர்களின் பங்களிப்புகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதுள்ள வாடகை நிறுவனங்கள் 2021  வரை இன்னும் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கின்றன. நிறுவனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வீட்டு வசதிகள், நிலையான வேலைவாய்ப்பு, நடமாடும் சுதந்திரம் அல்லது சட்டப்படி ஆகக் குறைந்த ஊதியம் போன்றவற்றை வழங்குவதில்லை.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி மற்றும் சுகாதார பராமரிப்புகளை பயன்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் 2012 முதல் சகல வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் சத்திர சிகிச்சை திட்டங்கள் இருத்தல் கட்டாயமாகும். கொடுப்பனவுகளை முதலாளிமார் அல்லது தொழிலாளர்கள் மேற்கொள்ளல் வேண்டும். வீட்டுப் பணியாளர்கள் எவ்வாறாயினும் பல அடிப்படையான தொழில் பாதுகாப்புகள், வேலை நேரம், ஓய்வு நாட்கள், பொது விடுமுறைகள், வருடாந்த விடுமுறைகள், சுகவீன லீவு, ஆகக் குறைந்த ஊதிய விதிமுறைகள் அல்லது சமூக பாதுகாப்பு காப்பீடுகளில் உள்ளடங்கியுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வருமான உழைப்பை உயர்த்தக்கூடியதாக அண்மைக்கால தொழிலாளர் சீர்திருத்தங்கள் இருத்தல், முதலாளிமார் இனிமேல் அவர்களின் ஊதியத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர் வரியைக் கழிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

ITUC உலகளாவிய உரிமைகள் குறிகாட்டியை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் தொழிலாளர் உரிமைகளுக்கான உலகளாவிய அந்தஸ்துகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் இங்கே.