மலேசிய அரசாங்கம் தற்பொழுது கைச்சாத்திட்டுள்ள இருதரப்பு தொழிலாளர் உடன்படிக்கைகளின் கண்ணோட்டமொன்றை கீழ்வரும் தகவல்கள் வழங்குகின்றன.

 

கம்போடியா, 2015; ஆட்சேர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பு மீதான தொழிலாளர் ஆட்சேர்ப்பு விதிமுறைகள், தொழில் ஒப்பந்தம். தொழில் புரியும் காலப்பகுதி, நிதி ஏற்பாடுகள்.

 

கம்போடியா, 2014; ஆட்சேர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக வீட்டுப் பணியாளர்களை மலேசியாவுக்கு அனுப்புதல்.

 

இந்தோனேசியா, 2006;வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்த்தல் மற்றும் தொழில்களில் ஈடுபடுத்துதல்.

 

தாய்லாந்து, 2003;  தாய்லாந்து பணியாளர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

வியட்நாம், 2003; தொழிலாளர் ஒத்தழைப்பு மீதான இருதரப்பு ஒப்பந்தம்.

 

இந்தியா, 2009; மலேசியாவில் தொழில்புரியும் இந்திய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, நலன்புரி மற்றும் இந்தியாவில் தொழில்புரிய விரும்புகின்ற  மலேசிய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

பங்களாதேஷ், 2015; மனிதவளத்தினை தொழிற்சந்தைக்கு ஏற்றுமதி செய்தல் மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 

பாகிஸ்தான், 2003; மனிதவள ஏற்றுமதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.