See this article for இலங்கை

ஏனைய நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதில்லை. தாய்வானின் அரசியல் மற்றும் சட்டத் தன்மை காரணமாக கடினமாக இருந்தமை நிரூபனமாகியது. பெரும்மாலானவர்கள் தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதில்லை. மற்றும் உத்தியோகபூர்வமற்ற முறையில் தொடர்புகளை மேற்கொள்கின்றனர். ஆயினும், தாய்வான் பிரதானமாக தாய்பே பொருளாதார மற்றும் கலாசார அலுவலகம் இத்தகைய ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் தாய்வானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் சொந்த நாடுகளின் அதுபோன்ற அலுவலகங்களுடன் கைச்சாத்திட முடிந்தது. அறிஞர்கள் இதுபோன்ற ஒப்பந்தங்களின் வினைத்திறனைப் பற்றி விமர்சிக்கின்றனர். எவ்வாறாயினும் ஆட்சேர்ப்பு செயன்முறையில்  தனியார்​ இடைத் தரகர்களின் தலையீடு காரணமாக அவர்களைக் கட்டுப்படுத்துதல் கடினமாவதுடன் அதுபோன்ற இருதரப்பு ஒப்பந்தங்களை சீரழிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. தாய்வான் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள தற்போதிருக்கின்ற இருதரப்பு ஒப்பந்தங்களைப் பற்றிய கண்ணோட்டத்தை கீழ்வரும் தகவல்கள்​ வழங்குகின்றது.

இந்தோனேசியா, 2004; தொழிலாளர்களின் துறையில் ஒத்துழைப்புகள் பற்றிய ஒப்பந்தம்.

பிலிப்பைன்ஸ், விசேடமாக வாடகைக்கமர்த்தும் தொழிலாளர்கள் பற்றிய ஒத்துழைப்புகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை; தாய்வான் அரசாங்கம் தாய்பே இல் அமைந்துள்ள மணிலா பொருளாதார மற்றும் கலாசார அலுவலகத்துடன் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்துள்ளது // மொழிபெயர்ப்பு சேவைகள், உளவளத்துணை சேவைகள், சட்டங்கள் பற்றிய திசைமுகப்படுத்தல் உதவிகள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், பணம் கோரிக்கைகளை மீளப் பெறுவதற்கான உதவிகள், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் காலாவதியான தொழிலாளர்களைத் திருப்பியனுப்புதல்.

வியட்நாம், 1999 ஒப்பந்த தொழிலாளர்களாக வியட்நாமிய தொழிலாளர்களை அனுப்புதல் மற்றும் பெறுதல் பற்றிய இருதரப்பு ஒப்பந்தம்; ஹனோய் இல் தாய்பே பொருளாதார மற்றும் கலாசார அலுவலகம் மற்றும் தாய்பே இல் அமைந்துள்ள வியட்நாம் பொருளாதார மற்றும் கலாசார அலுவலகத்துடன் கைச்சாத்திடல், 1999 // ஆட்சேர்ப்பு செயன்​முறையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு வியட்நாம் அரசாங்கத்திற்கே உண்டு.

தாய்லாந்து, 2003 வியட்நாமில் தாய்தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல் பற்றிய ஒப்பந்தம்; தாய்லாந்தில் தாய்பே பொருளாதார மற்றும் கலாசார அலுவலகம் மற்றும் தாய்பே இல் அமைந்துள்ள தாய்லாந்து வர்த்தக மற்றும் பொருளாதார அலுவலகத்துடன் கைச்சாத்திடல் // ஆட்சேர்ப்பு செயன்முறையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு தாய்லாந்து அரசாங்கத்திற்கே உண்டு. இந்த ஒப்பந்தம் வாடகைக்கமர்த்துவதனையும் வழிப்படுத்துகின்றது.