See this article for இலங்கை

தாய்வானுக்கு செல்ல விரும்பும் புலமபெயர்வோர் தற்போது தாய்வானுக்கான புலம்பெயர் தொழிலாளர் மீதான இலக்கியத்தினடிப்படையில் பின்வரும் குறிப்புகளை வகுக்க முடியும்.

    1. வெளிநாட்டு தொழிலாளர்களை பெறுவதற்காக தாய்வான் அரசாங்கத்திடமிருந்து உங்களுடைய முதலாளி (சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் விடயத்தில் கம்பனி அல்லது குடும்பம்) அனுமதி பெற்றிருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
    2. தேசிய ஆகக் குறைந்த சம்பளத்திற்கு ஏற்ப உங்களுடைய சம்பளம் இருக்கின்றதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
    3. உங்களுடைய வேலைவாய்ப்பு ஒப்பந்த காலத்தில் முதலாளிமார்களை மாற்றிக்கொள்ள வேண்டுமாயின், நீங்கள் அவ்வாறு செய்வதற்காக முதலில் தாய்வான் அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளல் வேண்டும். (வேலைவாய்ப்பு சேவைகள் சட்டத்தைப் பார்க்கவும். அத். 53)
    4. சுகாதார மற்றும் தொழிலாளர் காப்புறுதி அதேபோல விபத்துக் காப்புறுதித் தொகை என்பன (குறிப்பாக அதிக  அளவிலான விபத்துகள் இடம்பெறும் உற்பத்தி மற்றும் நிர்மானத் துறைகளில்) முதலாளியினால் வழங்கப்படுகின்றதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
    5. சம்பளம் மற்றும் வேலை நேரம் பற்றி முதலாளிமார் / குடும்பத்தினருடன் நீங்கள் உத்தியோகபூர்வமாக உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள்.
    6. புலம்பெயர் செயன்முறைகளுடன் தொடர்புடைய ஏனைய செலவுகள் அல்லது  ஆட்சேர்ப்புக் கட்டணங்களை சம்பளத்திலிருந்து  குறைப்புச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம்.
    7. தாய்வானில் சட்டவிரோதமாக தங்கியிருக்க வேண்டாம். இது அதிக தண்டப் பணம் அறவிடுவதற்கான தண்டனையாக அமையும்.