See this article for இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான குறித்த தேசிய சட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு;

வேலைவாய்ப்பு சேவைகள் சட்டம்;  சட்டத்தின் அத்தியாயம் V வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும்  ஆட்சேர்த்தல்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை வரையறை செய்கின்றது. குறைந்த திறன்வாய்ந்த தொழிலாளர்கள் குடிவரல்  (வேலைவாய்ப்புத் துறை மற்றும் தங்கியிருக்கும் காலம் உட்பட) பற்றிய கொள்கைகள் மற்றும் ஒதுக்கீடுகளை வரையறை செய்வதற்காக அது தொழிலாளர்  விவகார கவுன்சிலுக்கு (CLA) கட்டளையிடுகின்றது. தாய்வானுக்கு  வெளிநாட்டு தொழிலாளர்களை ஆட்சேர்த்தல்களுக்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளை வரையறை செய்கின்றது.

 

தொழில் தரங்கள் சட்டம்; தொழில் நிலைமைகளுக்கான ஆகக் குறைந்த தரங்கள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், தொழிலாளி - முதலாளி  இடையே உறவுகளைப் பலப்படுத்துதல் மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்களை இச்சட்டம் வரையறை செய்கின்றது. இச்ச் சட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சமமாகப் பிரயோகிக்கப்படுகின்றது.

 

வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கான அனுமதி மற்றும் நிர்வாக  ஒழுங்குவிதிகள்; இவ்வொழுங்கு விதிகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பல்வேறு குழுக்களை வரையறை செய்கின்றது (A-D வகை). வீசா மற்றும் வேலை அனுமதிப் பத்திரம் சம்பந்தமான பிரச்சினைகளை குறிப்பிடுகின்றது. அது முதலாளிமார் தாங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை  ஆட்சேர்க்க விரும்பினால் அவர்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை வரையறை செய்கின்றது. அது எந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை அல்லது நீடிப்புச் செய்யவில்லை என்பதற்கான நிபந்தனைகளை  அமைக்கின்றது.