See this article for இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தேசிய சட்டங்கள், பாதுகாப்புக்காக வேண்டி புலம்பெயர் தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்தும் ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் உள்ளடங்கலான விபரங்கள் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடுகின்றன. (அவை புறப்படுவதற்கு முன் பயிற்சி, காப்புறுதித் திட்டங்கள் போன்ற)

 

வருடம்

 

சட்டம்

 

விபரம்

1975

 

வெளி நாட்டவர்கள் தங்கியிருப்பதற் கான சட்டத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்தும்  அமைச்சரவை கட்டளை இல. 22

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது அங்கே பிரயோகிக்கக்கூடிய அனுமதியான நுழைவுப்பத்திரம், குவைத் தூதுவராலயத்தினால் அல்லது கொன்சியூலர்  அலுவலகத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் வீசா இன்றி  வெளிநாட்டவர்களை குவைத்திற்குள் நுழைவதைத் தடைசெய்கின்றது. விசேட வகையான வீசாக்கள் (பிரயாணிகள், வீட்டுப் பணியாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உட்பட) மற்றும் அவற்றைப் பெறுவதற்கான நிபந்தனைகள்;  தற்காலிக வதிவிட அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக சட்டப்படி குவைத்தினுள் வெளிநாட்டவர்களை நுழைவதற்காக அனுமதித்தல், மற்றும் அவர்களுடைய வருகையைத் தூண்டுவதற்காக சாதாரணமான வதிவிட அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் சந்தர்ப்பத்தில்  ஒருமாத காலத்திற்குள் குவைத்திலிருந்து

வெளியேறும்படி கோரப்படுகின்றனர். (அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கப்படாவிடில்) வெளிநாட்டவர்கள் குவைத்தை விட்டு

வெளியேறுகின்றபோது அவர்களுடைய கடவுச்சீட்டை அல்லது ஏனைய பயண ஆவணத்தை வெளியேறுகின்ற முத்திரையிடுவதற்காக கட்டாயம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1975

 

சவூதி அரேபியா,  பஹ்ரைன், ஐக்கிய  அரபு இராச்சியம், குவைத்திய பிரஜைகள் போன்ற  நபர்களை ஆதரிப்பதற்காக கவனத்திற்கொள்கின்ற சட்ட இல. 33

 

சவூதி​ அரேபியா,  பஹ்ரைன், மற்றும் ஐக்கிய  அரபு இராச்சியம்  ஆகியவற்றின் வியாபாரம் மற்றும் ஏனைய தொழில் கள்  சம்பந்தமாக  குவைத்திய பிரஜைகள் போன்று ஆதரிக்கப்படுகின்றனர்.

1977

 

1977 இன் சட்ட இல. 117 இல் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல், வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதனைக் கவனத்திற்கொள்கின்ற 1959  சட்ட இல. 17  இன் ஏற்பாடுகளை உட்படுத்தும் அமைச்சரவை கட்டளை இல. 70

 

வெளிநாட்டவர்கள் புறப்படுதல் அல்லது வருகை தந்தமையைக் குறிப்பிடுகின்ற விதி முறைகளை இந்தக் கட்டளை சுட்டிக் காட்டுகின்றது.

1982

 

GCC நாடுகளின் பிரஜைகள் தங்களுடைய தொழில்களை குவைத்தில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 51

 

GCC நாட்டுப் பிரஜைகள் மருத்துவ சிகிச்சை பெறல்,  சட்டம் மற்றும் ஏனைய தொழில்களில் குவைத்தில்  ஈடுபடுவதற்கு  இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது.  அதற்கேற்ப  பதிவுசெய்தல் மற்றும்  அனுமதிபெறுதல்  அவசியமாகும்.

1982

 

GCC நாடுகளின் பிரஜைகள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை  அனுமதிக்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 52

 

GCC நாட்டுப் பிரஜைகள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடல், அதாவது கைத்தொழில், விவசாயம் போன்ற  மற்றும் இந்தப் பிரதேசங்களில் உள்ள குவைத்தை  தளமாகக்கொண்டு இயங்குகின்ற கம்பனிகளில் முதலீடு செய்வதற்கும் இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது.

1982

 

அமைச்சரவை கட்டளை இல. 62

 

தேசிய துறைகளில் குவைத்தியர் அல்லாத தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கும்போது  புதிய விதிமுறைகளுடனான  ஏற்பாட்டுகளை இந்தக் கட்டளை உள்ளடக்கியுள்ளது.

1982

 

அமைச்சரவை கட்டளை இல. 123

 

உள்துறை அமைச்சின் கட்டளையொன்றின்படி அமெரிக்க பிரஜைகள் நுழைவு வீசா பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

1982

 

வீசா நுழைவுக்கான தேவைப்பாடுகளில் இருந்த ஓமானிய பிரஜைகளை விலக்களிப்புச் செய்தல்.

 

இந்த ஏற்பாடுகள் ஓமானிய  பிரஜைகள் நுழைவு வீசா பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர்.

1982

 

அமைச்சரவை கட்டளை இல. 262

 

நீண்டகாலம் தரித்திருத்தல் அல்லது குவைத் குடிவரவு சட்டத்தை மீறிய சகல

வெளிநாட்டவர்களையும்   இந்தக் கட்டளை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் குடிவரவு  திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்படல் வேண்டும் என்று இந்தக் கட்டளை வேண்டி நிற்கின்று. இந்தக் கட்டளையை மீறினால் 1959 இன் இல.17 சட்ட ஏற்பாடுகளின்படி தண்டிக்கப்படல் வேண்டும் என்பதை வெளிநாட்டவர்கள் தரித்திருத்தல் என்பது திருத்துகின்றது. 

1982

 

அமைச்சரவை கட்டளை இல. 330

 

வெளிநாட்டவர்கள் தங்களுடைய நிலைமையை

சீர்செய்துகொள்வதற்காக இந்தக்  கட்டளையின் காலப்பகுதி நீடிக்கப்படுகின்றது.

1983

 

GCC நாடுகளின் பிரஜைகள் மருந்தகங்களை குவைத்தில் பராமரிப்பதற்கா அனுமதிக்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 43

 

GCC நாடுகளின் பிரஜைகள் குவைத்தில் மருந்தகங்களை நடாத்துவதற்குத் தேவையான தகுதிகளை இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது.  அனுமதிப்பத்திரம் தேவையாகும்.

1983

 

குவைத்தில் GCC நாடுகளின் பிரஜைகள் அவர்களுடை தொழிலை செய்வதற்கு அனுமதிக்கும்  அமைச்சரவை கட்டளை இல. 44

 

GCC நாடுகளின் பிரஜைகள் குவைத்தில் தொழில்களை மேற்கொள்வதற்குத்  தேவையான தகுதிகளை தங்களிடம் வைத்திருத்தல்  மற்றும்  அவர்கள் குவைத்தில் நிரந்தரமாக வசித்தல் வேண்டும் என்று இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது. அனுமதிப்பத்திரம தேவையாகும்.

1983

 

குவைத்தில் GCC நாடுகளின் பிரஜைகள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும்  அமைச்சரவை கட்டளை இல. 45

 

GCC நாடுகளின் பிரஜைகள் குவைத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை நிறுவுதல் மற்றும் இயக்கிச் செல்லல் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது. 

1983

 

அமைச்சரவை கட்டளை இல. 485

 

வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை இந்தக் கட்டளை குறிப்பிடுகின்றது.

1984

 

அமைச்சரவை கட்டளை இல. 75

 

GCC நாடுகளின் பிரஜைகள் குவைத் பிரஜைகள் போன்று வேலைவாய்ப்புகளில்  சம்பந்தமான விடயங்களில் கவனிப்பதனை இந்தக் கட்டளை மதக்கின்றது.

1984

 

குவைத்தில் தனியார் துறையில் குவைத்தியரல்லாத தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கும்போது கவனத்தில் கொள்கின்ற  அமைச்சரவை கட்டளை இல. 77

 

1979 இன் அமைச்சின் கட்டளை இல. 37 மற்றும் 39 ஆகியவற்றை சமமான நோக்கங்களுக்காக இந்தக் கட்டளை மீள வலியுறுத்துகின்றது.

1984

 

அமைச்சரவை கட்டளை இல. 81

 

அரச செயற்றிட்டங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து  ஆட்சேர்க்கப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அத்துடன் குவைத் விமான சேவைக்கு மீண்டும் அவற்றை ஒப்படைப்பதற்காக தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்  என்று இந்தக் கட்டளை ஒப்பந்தக்காரர்களை வேண்டி நிற்கின்றது.

1984

 

அமைச்சரவை கட்டளை இல. 427

 

கம்பனியில் நுழைதல், வதிவிடம் மற்றும் பதிவுசெய்வதுடன் சம்பந்தப்பட்ட  சகல நடை முறைகளிலும் குவைத் பங்குதா​ர் கையொப்பமிடல் வேண்டும்  அல்லது அவரின் முகவர் குவைத் நாட்டவராக இருத்தல் கட்டாயமாகும் என்று இந்தக் கட்டளை வேண்டி நிற்கின்றது.

1985

 

அமைச்சரவை கட்டளை இல. 445

 

அதே வகையைச் சேர்ந்த நபர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் நுழைவு வீசா பெறுவதற்காக இந்தக் கட்டளை வேண்டி நிற்கின்றது.

1986

 

அமைச்சரவை கட்டளை இல. 86

 

தொழில் அனுமதிப் பத்திரங்களை வழங்கல், புதுப்பித்தல், இரத்துச் செய்தல் அல்லது மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்களுடன் 1984 இன் அமைச்சரவை கட்டளை இல. 77 இன் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு கூட்டுத்தாபனத்திற்கு சான்றுக் கட்டணம் செலுத்துவதற்காக  பங்களிப்புச் செய்தல் வேண்டும் என்று இந்தக் கட்டளை வேண்டி நிற்கின்றது.

1986

 

அமைச்சரவை கட்டளை இல. 535

 

தங்களுடைய சேவைக் காலம் முடிவுற்ற  மற்றும் சேவையிலிருக்கும் போது இறந்த இராணுவம் மற்றும் பொலிசாரின் பிள்ளைகளை உள்ளடக்கி 1986 இன்  அமைச்சரவை கட்டளை இல. 177  இன் அத்தியாயம் 1 இன் நோக்கெல்லையை இந்தக் கட்டளை விரிவாக்கம் செய்கின்றது. விதவைகளும் இந்த வகையில் உள்ளடக்கப்படுகின்றனர்.

1987

 

குவைத்தில் GCC நாடுகளின் பிரஜைகள்  சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும்  அமைச்சரவை கட்டளை இல. 2

 

GCC நாடுகளின் பிரஜைகள் மற்றும்  அமைப்புக்கள் குவைத்தில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக இந்தக் கட்டளை  அனுமதிக்கின்றது.

1987

 

அமைச்சரவை கட்டளை இல. 228

 

குறித்த நபர் ஆறு மாதங்களுக்கு மேல் குவைத்திற்கு சமூகமளிக்காதவிடத்து வதிவிட அனுமதிப் பத்திரம் செல்லுபடியற்றதாகும் என்று இந்தக் கட்டளை  விதிக்கின்றது. மாணவர்கள், வெளிநாட்டில் சிகிச்சையளிப்பதற்காக கோரப்படுகின்ற  நிலைமையிலுள்ள நோயாளர்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கு மேல்  தங்களுடைய கடமைகளுக்கு சமூகமளிக்காத தொழிலாளர்கள் இந்த விதிமுறையிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர். விலக்களிக்கப்படுகின்றவர்கள்  சமூகமளிக்காமைக்கான காரணத்தை தேடுதல் மற்றும் அனுமதிபெறல் வேண்டும். எழுத்து மூல மற்றும் சான்றிதழ்களை ஆதாரமாக சமர்ப்பித்தல் கட்டாயமாகும்.

1987

 

அமைச்சரவை கட்டளை இல. 444

 

மருத்துவ சான்றிதலொன்றை வெளிநாட்டவர் ஒருவர் பெறுவதற்காக பத்து குவைத் தீனார்களை (33 USD) செலுத்த வேண்டும் என்று இந்தக் கட்டளை கோருகின்றது.

1987

 

வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதற்கான சட்டத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்தும்  அமைச்சரவை கட்டளை இல. 640

 

வெளிநாட்டவர்கள் குவைத்தில் நுழைவதற்காக மற்றும் வதிவிட நோக்கத்திற்காக குவைத் நுழைவாயிலில் தேவையான  ஆவணங்களை சமர்ப்பித்தல்​வேண்டும் என்று இந்தக் கட்டளை குறிப்பிடுகின்றது. தரை  வழிப்​பாதையிலும் வெளிநாட்டவர்களின் வருகையை (உத்தியோகபூர்வ வீடுகளின் முகவர்கள் உட்பட) உறுதிப்படுத்துவதற்காக உள்துறை  அமைச்சு இதனைக் கோரிநிற்கின்றது.

1988

 

காப்புறுதி செய்யப்பட்ட நபர்களின் விடயத்திற்கான 1998  சட்ட இல. 11 இற்கான  நிபந்தனைகள் மற்றும்  முறைமைகளைக்  கவனத்திற்கொள்கின்ற  நிதி அமைச்சரவை கட்டளை இல. 4

 

1976 இன் சமூக காப்புறுதி சட்ட இல. 61 இன் இந்த ஏற்பாடுகள் முதலாளியொருவர்  விடயத்திற்குப் பொறுப்பில்லாமல்  உள்ளூரில் அல்லது நாட்டுக்கு வெளியில் தொழிலில் ஈடுபடுவதனை குவைத்தியர்களை அங்கீகரிக்கின்றது.  முதலாளிமாரின் கோரிக்கைக்கு அமைய நன்மைகளை  திருத்தியமைக்கலாம்.  இந்த சட்டத்தின் III ​ ஆவது தலைப்புக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது. இந்த நோக்கத்தினை அடையும் பொருட்டு நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் கட்டமைக்கப்படுகின்றன.

1988

 

பங்களிப்புத் தொகை மற்றும் ஏனைய கணக்குகளுக்கான நேர எல்லை, நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் சம்பந்தமாக கவனத்திற்கொள்கின்ற நிதி அமைச்சின் சட்ட ஏற்பாடு இல. 5

 

குறிப்பாக சம்பளத்தில் 15% இனைக் கணக்கிட்டு 1988 இன் தொழிலாளர் சட்ட இல. 11 இன்படி பங்களிப்புத் தொகைகளை இந்த ஏற்பாடுகள் மூலம் செலுத்தலாம்  எனப்படுகின்றது. வெளிநாட்டில் தொழில்புரிவோர்  மற்றும் அதுபோன்ற  நபர்கள் சமூக பாதுகாப்பு முறைமையின் விருப்பத்திற்கேற்ப உள்வாங்குவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தினைக் கவனத்திற்கொள்ளப்படுகின்றது.

1988

 

வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதனைக் கவனத்திற்கொள்கின்ற 1959 இன் இல. 17 திருத்தச் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகள் இல. 7

 

சட்ட ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வோர்க்கு தண்டம் அறவிடுவதனை இந்தக் கட்டளை வேண்டி நிற்கின்றது.  அறிவிடப்படுகின்ற கட்டணத் தொகையை  சட்டத்தின் ஏற்பாடுகளில் குறிப்பிடப்படுகின்றதை விபரிக்கின்ற பட்டியலொன்று இணைக்கப்பட்டுள்ளது.

1988

 

குவைத்தில் GCC நாடுகளின் பிரஜைகள் தொழில்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும்  அமைச்சரவை கட்டளை இல. 7

 

GCC நாடுகளின் பிரஜைகள் மொழிபெயர்ப்பு,  நில அளவை, பாடசாலை  மேற்பார்வை, கணினி நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் கொடுக்கப்பட்ட தகவல் தயாரிப்புகளுடன் கூடிய வேலைகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களாக தொழில் ஈடுபடுவதனை இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது. பதிவு செய்தல் மற்றும் அனுமதிப் பத்திரம் தேவையாகும். மற்றும் ஏனைய நிர்வாகத் தேவைகளையும் பெறல் கட்டாயமாகும்.

1988

 

GCC நாடுகளின் பிரஜைகள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும்  அமைச்சரவை கட்டளை இல. 8

 

GCC நாடுகளின் பிரஜைகள் மற்றும் நிறுவனங்கள் குவைத்தில் அமுலில் உள்ள சட்ட ஏற்பாடுகளுடன் கண்டுபிடித்தல் (அளவு பகுப்பாய்வு உள்ளடங்கலாக) மற்றும் திருத்த வேலைகள் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இந்தக் கட்டளை அனுமதிக்கின்றது.  சட்ட ஏற்பாடுகளின்படி கம்பனிகள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் GCC நாடுகளின் பிரஜைகளுக்கு இயலுமாகும். அவர்கள் தங்களுடைய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும் (GCC நாடுகளின் பிரஜைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும்)

1988

 

வெளிநாட்டில் வேலைசெய்கின்ற நபர்கள் மற்றும் அத்துடன் இணைந்த தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தில் தன்னார்வ முறையில் பங்கேற்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல. 11

 

அந்த சட்டத்தின்  III ஆவது தலைப்பின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சமூக காப்புறுதியில் பங்கேற்பதற்கும் குவைத் தொழிலாளர்கள் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கு அல்லது 1976 இன் சமூக காப்புறுதி சட்ட இல. 61 இந்த ஏற்பாடுகள் உள்ளூரில் விடயத்திற்குப் பொறுப்பில்லாத முதலாளியொருவர் மூலம் தொழிலில் ஈடுபடுவதனை அங்கீகரிக்கின்றது.

1989

 

குவைத்தில் தனியார் துறையில் குவைத்தியரல்லாத தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திரம் வழங்குவதை நீக்குதலைக் கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 88

 

சமூக விவகாரங்கள் மற்றும் தொழில் அமைச்சினால் இயற்றப்பட்ட  இந்தச் சட்டம் 1982 இன்  அமைச்​சரவை  கட்டளைகள்  இல. 60  மற்றும் 64, மற்றும் 1983 இன் இல. 71 மற்றும் 1984 இன் இல. 72 இனை இரத்துச் செய்கின்றது. தனியார் துறையில் குவைத்தியரல்லாத தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திரம் வழங்குதில் உள்ள சிக்கல்களையும் அதிகார அமைப்புகளில் உள்ள தொழில் திணைக்களங்களின்  கட்டமைப்புகளிலிருந்து  தொழில் அனுமதி வழங்கும் பிரிவுகளை நீக்குவதனையும் கவனத்திற்கொள்கின்றது.

1990

 

அமைச்சரவை கட்டளை இல. 91

 

1989 இன் அமைச்சரவை கட்டளைகள் இல. 89 அத்தியாயம் 2 இன் பிரிவு (i) இனை இரத்துச் செய்கின்றது.

1990

 

குவைத்தில் தனியார்  துறையில் தொழில்களை  ஒழுங்கு படுத்தும்போது 1989  இல. 87 இன்  அமைச்சின் சீர்திருத்தக் கட்டளை இல. 87 ஐக்  கவனத்தில்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை  இல. 92

 

தனியார் துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள நபர்கள் அனுமதிப் பத்திரங்களை மாற்றுவதற்காக இந்தக் கட்டளைகள் ஒழுங்குபடுத்துகின்றன.

1992

 

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களின் தங்கிவாழ்பவர்கள் நுழைவதனை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை கட்டளை இல. 2

 

குவைத்தில் அரச துறையில் வெளிநாட்டவர் ஒருவர் தொழில் பெற முடியும். அவர் மாதமொன்றுக்கு ஏறத்தாழ 450 தீனார்கள் (1,481 USD) உழைக்கலாம் மற்றும் அவரின் மனைவி பிள்ளைகள் மூவருக்கும் இணைந்துகொள்ளலாம். தனியார் துறையில் வேலைசெய்பவர்கள் தங்களுடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைக்களுடன் இணைந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மாதமொன்றுக்கு ஆகக் குறைந்தது  650 தீனார்களை (2,140 USD) உழைக்க வேண்டும்.  அத்துடன் ஒருவருடத்திற்கு  100 தீனார்களை (329 USD) குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு வரியாகச் செலுத்த வேண்டும். இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள வெளிநாட்டவர்கள் அவர்கள் மேலதிக  வருடாந்த வரியை ஒவ்வொரு பிள்ளைக்கும் செலுத்துவதாயின் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான பிள்ளைகளை விடவும் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளைக் கொண்டு வரலாம்.

1992

 

வீட்டுப்பணியாளர்  சேவைகளை வழங்கும்  முகவர் அனுமதிப்பத்திரம் பெறுவதன் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை கட்டளை இல.617  

 

1992 இன் சட்டமன்ற ஆவண இல. 40 இன்படி உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கட்டளைகள் மற்றும் வீட்டுப்பணி சேவைகளை வழங்கும்  முகவர் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தகுதி விதிகள் மற்றும் ஏனைய விடயங்களையும் கவனத்திற்கொள்ளப்படுகின்றது. வீட்டுப் பணியாளர்களை குவைத்திற்கு அழைத்து வருவதற்கான (பொதுவாக ஆசியாவிலிருந்து) பொறுப்பு, குறித்த முதலாளியின் ஒப்பந்தத்தில் சொல்லப்படும் நிபந்தனைகளின்படி அனுமதிபெற்ற முகவர்களுக்கு உண்டு. முதலாளி முகவர்களின் கமிஷன், பணியாளரின் பிரயாணச் செலவுகள், ஆனால் அவர் அதிருப்தியடைந்தால் பணியாளர்  முகவரின் செலவில் திருப்பியனுப்பப்படுவார். கட்டளையின் இறுதியில் இரண்டு மாதிரி ஒப்பந்தங்கள் வெளியிடப்படும்.  முதலாவது முகவரின் ஒப்பந்தம் மற்றும் இரண்டாவது, முதலாளிக்கும் பணியாளர்க்கும் இடையில் முடிக்கப்படவேண்டிய ஒப்பந்தம். எவ்வாறாயினும்  இந்த ஒப்பந்தங்கள் இரண்டும் கட்டளையின் ஒன்றிணைந்த பகுதிகளாக உள்ளனவா என்பது தெளிவாக இல்லை.

1992

 

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டவர்கள் விரும்புகின்றபோது தங்களுடைய தங்கிவாழ்பவர்களை இணைத்துக்கொள்ளல் சம்பந்தமாக கவன்திற்கொள்கின்ற  அமைச்சரவை கட்டளை இல. 668

 

குவைத்தில் வெளிநாட்டவர்கள் சார்புடைய  தங்கிவாழ்பவர்கள் தொடர்பாக சகல நடைமுறைகளும் முன்னைய 1992 இன் அமைச்சரவை  கட்டளைகள் இல. 2  மற்றும் 178  இன்படி நிர்வகிக்கப்படும் என்று இந்தக் கட்டளை விதிக்கின்றது.

1993

 

சிவில் சேவை ஆணைக்குழு  கட்டளை இல. 3

 

குவைத்தியரல்லாத தொழிலாளர்களின் தொழில்  ஒப்பந்தங்களில் ஏனைய முறையிலமைந்த விடுமுறைகளுக்காக சம்பளத்தில் குறைப்பைச் செய்வதற்காக புதிய பிரிவொன்றை உட்படுத்துவதற்கு இந்தக் கட்டளை இடம் வழங்குகின்றது.

1993

 

அமைச்சரவை கட்டளை இல. 93

 

தொழிலாளர் பரீட்சிப்புக்காக சிவில் சேவையாளர்களை நியமித்தல் தொடர்பான  1985 இன் அமைச்சரவை கட்டளைகள் இல. 83 இன் சில விதிகளை இந்தக் கட்டளை திருத்துகின்றது.

1993

 

தனியார் துறையில் தொழில் அனுமதிப் பத்திரம் வழங்குதல் மற்றும் கைமாற்றுதல் சம்பந்தமாக கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 95

 

1984 இன் அமைச்சரவை கட்டளைகள் இல. 78  இனை இந்தக் கட்டளை இரத்துச் செய்கின்றது.  அது பங்களாதேஷ் குடியரசிலிருந்து வருகின்ற பெண் தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப் பத்திரம் வழங்குவதனைத்  தடைசெய்கின்றது. இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து மருத்துவ பயிற்சி பெறுபவர்கள், பொறியியலாளர்கள்,  அசிரியர்கள் மற்றும் தாதிமார்களை விலக்களிக்கப்படுகின்றனர்.

1993

 

1993 இன் அமைச்சின் கட்டளை இல. 95 இன் திருத்தச்சட்டம் 3 இல் தொழில் அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் கைமாற்றுதல் சம்பந்தமாக கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 97

 

இந்தக் கட்டளை தனியார் துறையில் தொழிலாளர்கள் வதிவிட அனுமதிப்பத்திரம் மாற்றுவதனை அனுமதிக்கின்றது. மற்றும் ஏனைய பிற வகையான இடமாற்றங்களையும் தடுக்கின்றது.

1993

 

1993 இன் அமைச்சரவை கட்டளை இல. 99 இன் தனியார் துறை வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்துதல் மீதான சில ஏற்பாடுகளைத்  திருத்துதல் மீதான அமைச்சரவை கட்டளை இல. 100

 

சமூக விவகாரங்கள் மற்றும் தொழில் அமைச்சு  தொழிலாளர்களுக்கு தனியார்துறை கைத்தொழில்ளை வழங்குவதற்காக அரசாங்க செயற்றிட்டங்களில் பல்வேறு ஏற்பாடுகளை செய்வதற்காக கட்டளையிடுகின்றது.  குறிப்பாக ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்வதற்காக அல்லது செயற்றிட்மொன்றிலிருந்து  இன்னொன்றுக்கு மாற்றுதல் குறிப்பாக, அமைச்சு  புதுப்பித்தலுக்கான விண்ணப்பமொன்றை இரத்துச் செய்தல் அல்லது வேலை அனுமதிப்பத்திரத்தை  நிராகரித்தால் முதலாளி  உடனடியாக தொழிலாளியை அவரின் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்புதல் வேண்டும்.  

1993

 

தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் அந்த முன் ஏற்பாடுகளில் குறிப்பிடப்படுகின்ற குறித்த  பிணையாளர்களின்  நிதி பிணைமுறி ஒழுங்குபடுத்தல்களைத் தயாரித்தல் மீதான  அமைச்சரவை கட்டளை இல. 101

 

1990 இன் அதே​ விடயத்திற்கான இந்தக் கட்டளை விதிமுறைகளை மீறுகின்றது. கைத்தொழிலின் அளவுக்கேற்ப தனியார்துறை முதலாளிமார் 150 முதல் 250 வரையான குவைத் தீனார்களை  நிதி உத்தரவாதத்தை  கட்டாயம் வழங்க வேண்டும். முதலாளி தொழிற் சட்டத்தை மீறினால் அமைச்சு முழுமையாக அல்லது பகுதியளவில்  முன்னறிவிக்கலாம். குறிப்பாக அவர் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் நேரத்திற்கு வழங்குவதற்குத் தவறின் அல்லது  அவர்களின் தொழில் ஒப்பந்தம் காலாவதியாகிய பிற்பாடு அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்புவதற்குத் தவறின.

1993

 

வெளிநாட்டவர்கள் தங்கியிருத்தல் பற்றி கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 217

 

1995 மே மாதம் 31 ஆம் திகதிக்குள் முறையற்ற சட்டவிரோத புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி முன்னைய அமைச்சரவை கட்டளைகள் மூலம் அறிவித்து அறவிடப்பட்ட தண்டப் பணத்திலிருந்து விலக்களித்தல். முறையற்ற விதமாக புலம்பெயர்ந்தோர்  அவர்களின்  நிலைமைகளை ஒழுங்குபடுத்துவதனைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டவர்கள் குறித்த  திகதிக்குள் வெளியேறுவதற்குத் தவறியமையால் தண்டப்பணம்  அறவிடுவதிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள்.

1993

 

சட்ட ஏற்பாடு இல. 221

 

இந்தக் கட்டளை சட்ட விரோத குடியேற்றக்காரர்ளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு மத்திய கமிட்டியினை ஸ்தாபிக்கின்றது.

1993

 

வெளிநாட்டவர்கள் தங்கியிருத்தல் பற்றி கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 502

 

தங்கிவாழ்பவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக கட்டணம் அறவிடுவதனை  இந்தக் கட்டளை ஒழுங்குபடுத்துகின்றது. அக்கட்டணம் தங்கிவாழ்பவர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் உறவுநிலை போன்றவற்றில் தங்கியுள்ளது.  

1993

 

1992 இன் அமைச்சரவை  கட்டளை இல. 617 இனை திருத்துவதற்கான மேலதிக கட்டணங்கள் பற்றி கவனத்திற் கொள்கின்ற அமைச்சவை கட்டளை இல. 725

 

தனியார்துறை வேலைவாய்ப்பு முகவர்களினால் அனுமதிப் பத்திரம் பெறுவற்காக கட்டணம் அறவிடப்படுவதனை இந்தக் கட்டளை ஒழுங்குபடுத்துகின்றது.

1993

வதிவிட சான்றிதழ்கள் பற்றி கவனத்திற்கொள்கின்ற அமைச்சரவை கட்டளை இல. 932

வெளிநாட்டவர்கள் குவைத்திற்கு வருகை தரல்  அல்லது வெளியேறுவதற்கு சான்றிதழ் வழங்குவதற்காக குடிவரவு விவகார பணிப்பாளர் அதிபதிக்கு இந்தக் கட்டளை அதிகாரமளிக்கின்றது. இச் சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்து கட்டணம் செலுத்துதல் வேண்டும்.

1994

 

1993 இன் அமைச்சரவை கட்டளை இல. 99 இனை திருத்துவதில் உள்ள குறித்த ஏற்பாடுகள் மீதான அமைச்சரவை கட்டளை இல. 102

 

வேலை அனுமதிப் பத்திரம் (வெளிநாட்டவர்களுக்கு) வழங்குவதனை  மூன்று மாத காலத்திற்கு நிறுத்துவதற்காக உத்தரவிடுவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்காக கடமையாற்றுகின்ற ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அரசாங்க தொழிற்சலைகள் இதிலிருந்து விடுபடவும் சமூக விவகாரங்கள் மற்றும் தொழில் அமைச்சுக்கு இந்தக் கட்டளை அதிகாரமளிக்கின்றது. ஏனைய ஏற்பாடுகளான ஒரு முதலாளியிடமிருந்து பிறிதொரு  முதலாளியிடம் இடம்மாறல் (அனுசரணை வழங்குபவர்கள் பற்றிய முறைமைக்கானதொரு குறிப்பு), மற்றும் முதலாளிமார் தொழில் அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பிக்கும்போது  அவர்கள் பணிக்கமர்த்த  உத்தேசிக்கின்ற தொழிலாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் பிரதிகளை சமர்ப்பித்தல் கட்டாயமாகும் என்பதனை தற்காலிகமாக  அதிகாரமளிக்கின்றது.

1994

 

குறிப்பிட்ட ஒருசில துறைகளில் தொழில் அனுமதிப் பத்திரம் வழங்குவதனைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சரவை கட்டளை இல. 107

 

சமூக விவகாரங்கள் மற்றும் தொழில்  அமைச்சின் பட்டியல்படுத்தும் பிரிவு மற்றும் தொழில்கள் மீதான ஒரு கட்டளையானது  ​ வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கலாம்.

1995

 

தொழில் மற்றும் சமூக விவகாரங்கள்  அமைச்சரவை கட்டளை இல. 110

 

தனியார்துறை முதலாளிமார் 100 தீனார்கள் அல்லது  அதற்குமேல்  உழைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை  குவைத் வங்கியொன்றின் ஊடாக செலுத்துதல் வேண்டும்.  அந்த நோக்கத்திற்காகவேண்டி  தொழிலாளர்கள் குவைத் வங்கிகளில் கணக்கொன்றை  ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்துதல் வேண்டும்.  முதலாளிமார்கள் தங்களுடைய வேலை இடத்தில் அவர்களின் சகல தொழிலாளர்களினதும்  பெயர்கள் மற்றும் நாடுகளின் பட்டியலொன்றை தெரியக்கூடிய  இடமொன்றில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

1998

 

அமைச்சரவை கட்டளை இல. 119

 

1994 இன் S. 14 அமைச்சரவை கட்டளை இல. 106 இனை வேலை அனுமதிப்பத்திரம் பெறும் தேவைகளின் நிமித்தம் இக் கட்டளையானது மாற்றியமைக்கின்றது. 1998 இன் அமைச்சரவை கட்டளை இல. 118 இனை இரத்துச் செய்கின்றது.

2006

 

அழைப்புக் கடிதத்திற்குப் பதிலாக நாட்டில் தொழில் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக அமைச்சரவை சட்ட ஏற்பாடு இல. 159

 

அழைப்புக் கடிதத்தை மாற்றி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான  நிபந்தனைகளை  கட்டளைகள் பின்வருமாறு அமைக்கின்றது.

 

தொழிலாளரின் தேவைப்பாடுகள்;

  1. வழங்கப்படும் பதவியுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பட்மொன்று இருத்தல்வேண்டும்.
  2. சுகாதார அமைச்சினால் நடாத்தப்படும் மருத்துவ பரிசோதனையில் சித்தியடைதல் வேண்டும்.
  3. தனியார் துறையில் தொழிற்சட்ட

தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல்

வேண்டும். (38/1967)

2006

 

ஒரு வெளிநாட்டு தொழிலாளி தனியார் துறையில் தொழில் அனுமதிப் பத்திரம் மற்றும் முதலாளியை மாற்றுதல் பற்றிய அமைச்சரவை சட்ட ஏற்பாடு இல. 161

 

சுமார் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் நாட்டில் தங்கியிருப்பின் ஒரு முதலாளியிடமிருந்து பிறிதொரு முதலாளியிடம் தொழில் அனுமதிப்பத்திரம் மூலமாக இடமாற்றம் பெறுவதற்கு இக்கட்டளை அனுமதிக்கின்றது. மேலதிகமாக  அமைச்சரவை கட்டளை இல. 153/2004 சம்பந்தமாக முதலாளி யொருவரை மாற்றுவதனை இக்கட்டளை இரத்துச் செய்கின்றது.

2006

 

தனியார் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமைகளை  ஒழுங்குபடுத்துவதற்கான  கமிட்டியின் வேலை அட்டவணை மீதான அமைச்சரவை சட்ட ஏற்பாடு இல. 305

 

தனியார் துறையில் வீட்டுப் பணியாளர்களின் நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் கமிட்டியொன்றை இக்கட்டளை மூலம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அது கமிட்டி அங்கத்தவர்களின் கடமைகளையும் பதவிகளையும் ஒழுங்குபடுத்தி அமைக்கின்றது.