உங்களுடைய ஆட்சேர்ப்பவர்களின் நிலையை உறுதிசெய்துகொள்ளவும்!

ஆட்சேர்ப்பு செயன்முறையை தொடர்வதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் (இ.வெ.வே.ப) அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு முகவர்களினைப் பற்றி தேடிப்பார்க்கவும்.

 

உங்களுடைய தேடுதல்!

இ.வெ.வே.ப இன் புறப்படுவதற்கு முன்னைய பக்கத்தினை சரிபார்க்கவும். அதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு முடிவெடுத்தல், முகவர் ஒருவர் அல்லது நண்பர் ஒருவர் ஊடாக தொழிலொன்றைத் தேடுதல், பயிற்சி, கடன் வசதிகள், திசைமுகப்படுத்தல், தொழில் ஒப்பந்தங்கள், புறப்படுவதற்கு முன்னர் அனுமதி வழங்கல், சட்டப்படியான பதிவுகள், மற்றஞம் பயணத்திற்காக தயாராதல் என்பவற்றைப் பார்க்கலாம். இ.வெ.வே.ப புறப்படுவதற்கு முன்னர் பல பயிற்சிநெறிகளை நடாத்துகின்றது.  விசேடமாக வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அத்துடன், அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர்களின் சங்கமும் (அ.வெ.மு.ச - ALFEA) அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர்கள் பற்றிய தகவல்களையும் தடைசெய்யப்பட்ட முகவர்களின் பட்டியலையும் அதாவது அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர்களின் சங்கத்திற்கான நெறிமுறைக்கோவையில் (CoEC) குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு முறைகேடான நெறிமுறைகளைப் பின்பற்றுதல் பற்றியும் வழங்குகின்றது.

 

நியாயமானதொரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுதல்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பட்டியல்படுத்தப்பட்ட தொழில்  ஒப்பந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி நியாயமானதொரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதனை விளங்கிக்கொண்டமை பற்றி உறுதிப்படுத்திக்கொள்ளல். உங்களுடைய ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடவும் பேரம்பேசவும். உங்களுக்குப் புரியாத அல்லது நீங்கள் உடன்படாத ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம்.

 

உங்களுடைய உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் பயணிக்கின்ற நாட்டின் தொழிற் சட்டம் பற்றி அதிகமாகத் தேடிப்பார்க்கவும். நீங்கள்  ஆட்சேர்த்தல் அல்லது வேலைவாய்ப்பு சிக்கல்களை எதிர்கொண்டால்  பயனுள்ள அரச மற்றும் தொழிற்சங்க தொடர்புகளை எப்போதும் வைத்திருங்கள்.

 

உங்களுடைய முறைப்பாடுகளைப் பதிவுசெய்யுங்கள்!

ஆட்சேர்ப்பு அல்லது வெளிநாட்டில் உங்களுடைய வேலைவாய்ப்புகளுடன் தொடர்புடையதாக எதிர்கொள்கின்ற பிரச்சினைகளின்போது உதவியளிக்கின்ற பொறிமுறைகள் பல உண்டு. இ.வெ.வே.ப மற்றும் நீங்கள் பயணிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்களில் உங்களுடைய முறைப்பாடுகளைப் பதிவுசெய்யலாம். வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கும் உங்களுக்கும் தகவல்களுடன்கூடிய  வழிகாட்டல்களைப் பெறவும் இலங்கைத் தொழிலாளர்  காங்கிரஸ் தற்காலிக ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.

 

ஏனைய பயனுள்ள தகவல்கள்

  • பயிற்சி
  • இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன்புரி நிதியம் (OWWF)
  • நலன்புரி வசதிகள்
  • முரண்பாட்டு முகாமைத்தவ முறை
  • அரச சார்பற்ற அமைப்புகள்
  • ஹெல்விடாஸ் - Helvetas
  • சொலிடாரிடி - Solidarity Center
  • காரிடாஸ் - Caritas
  • பெண்கள் ஆராய்ச்சி மையம் - CENWOR