புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய சட்டத்திற்கு உரிய விபரங்களினை, புலம்பெயர்  தொழிலாளர் ஆட்சேர்த்தல்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக பின்வரும் அட்டவணை விபரிக்கின்றது. (அதாவது புறப்பட்டுவதற்கு முன் பயிற்சி, காப்புறுதித் திட்டங்கள், அடங்கலாக)

 

வருடம்

சமவாயம்

விபரம்

1985

 

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக சட்டம் (இல. 21)

இந்தச் சட்டம் இலங்கைக்கு வெளியில் இலங்கையர்களை வேலை வாய்ப்புக்காக ஆட்சேர்ப்பதனை ஒழுங்குபடுத்துகின்றது. அது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை ஸ்தாபித்து  அதன் பிரதான தொழிற்பாடுகளாக மனிதவளத்தை ஏற்றுமதி செய்தல், அதேபோல சாத்தியம் வாய்ந்த  உண்மையான மற்றும் முன்னாள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்குதல். இலங்கை வெளிநாட்டு  வேலைவாய்ப்பு  பணியகத்தின் மேற்பார்வையின்கீழ் இந்த சட்டம் சகல வெளிநாட்டு  வேலைவாய்ப்பு  முகவர்களுக்கும் அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக விதிகளை மேற்கொள்வதுடன்  அந்த அனுமதிப்பத்திரங்ளைப் பெறுவதற்கான நிபந்தனைகளையும்  முறைமைகளையும் தீர்மானிக்கின்றது.  குறிப்பாக, வேலை வாய்ப்புக்காக வெளிநாட்டுக்குப் புறப்படுவதற்கு முன்னர் இலங்கையர்களுக்கு பயிற்சி மற்றும் திசைமுகப்படுத்தல்களை வழங்குவதுடன் பணியகம் கட்டணங்களையும் அறவிடுகின்றது. திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்களை புனர்வாழ்வளிப்பதற்கான செலவுகளை   ஈடுசெய்வதற்காக பராமரிப்பு மற்றும் நிதி வசதிக்காக நலன்புரி நிதியமொன்றை விசேடமாக  அமைப்பதற்கு பணியகம் வேண்டி நிற்கின்றது.  இலங்கையர்கள் வெளிநாட்டில் தொழில்புரிதல் மற்றும் திரும்பிவருதல் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவல் வங்கியை பணியகம் ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்து வரல், சட்டத்திற்கெதிரான குற்றங்களுக்காக குற்றவியல் தண்டனை வழங்கப்படும்.

1985

இலங்கை வெளிநாட்டு வேலை  வாய்ப்புப் பணியகத்தின் நிபந்தனைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர் ஒருவர் வியாபாரத்தினை கொண்டு நடாத்துவதற்காக அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான விளக்கமான நிபந்தனைகளை இந்த விதிமுறைகள் விபரிக்கின்றது.  வெளிநாட்டில் வேலைசெய்தவற்காக ஒவ்வொரு தொழிலாளரும் இலங்கை வெளிநாட்டு வேலவாய்ப்பு  பணியகத்திற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை அவர்கள் தீர்மானிக்கின்றனர்.  குவைத், ஐக்கிய அரப அமீரகம், சவூதி அரேபியா​ மற்றும் ஏனைய நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதனை உள்துறையில் நிர்வகிக்கின்ற ​வேலைவாய்ப்பு ஒப்பந்​தத்தின் மாதிரியொன்றை இந்த ஒழுங்குவிதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.  கடமையைப் பொறுப்பேற்றவுடன்  முதலாளி அவரின் பிரயாணச் செவுக்கான கொடுப்பனவை செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளைச் செய்தல் வேண்டும்.  அத்துடன் திரும்பி வருவதற்காக பிரயாணச் செலவுகளை மற்றும் கடமை நிறைவில்  பணிக்கொடை கொடுப்பனவாக ஒருமாத சம்பளத் தொகைக்கு குறையாத அளவினைச் செலுத்துதல் வேண்டும். இலவசமாக தங்குமிடம் உணவு மற்றும் மருத்துவ பராமரிப்புகள் உட்பட விபத்துக் காப்புறுதி, சுகவீனம், அல்லது  நிரந்தர அங்கவீனம்போன்றவற்றுக்கான காப்புறுதி  வசதிகளையும் முதலாளி செய்துகொடுக்கும்படி கோரப்படுகின்றார்.

1990

 

மாதிரிவேலைவாய்ப்பு  ஒப்பந்தம் -  இலங்கை       வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

 

ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மாதிரி வேலைவாய்ப்பு  ஒப்பந்தம் (வீட்டுப் பணியாளர்கள் தவிர) ஒழுங்குபடுத்துகின்றது. தொழிலாளி கடமையைப் பொறுப்பேற்றவுடன் அவரின் பிரயாணச் செலவுகளைக் கொடுப்பனவு செய்வதற்கு முதலாளி வேண்டப்படுகின்றார். ஒப்பந்த முடிவில் திரும்பிச் செல்வதற்கான செலவினையும் நியாயமான காரணங்களின்றி முதலாளி ஒப்பந்​தத்தை முறித்தல், தொழிலாளி சுகவீனம் அல்லது விபத்து காரணமாக  பணியைத் தொடர  முடியாமை, கட்டாயப்படுத்தல்களின்போது  தொழிலாளரின்  பிழையின்றி

ஒப்பந்த​த்தை முடித்தல் போன்றவற்றுக்காக அவர் செலுத்த வேண்டும். தொழிலாளி  இலவச உணவு, தங்குமிடம், மற்றும் அவசர மருத்துவ பராமரிப்புகளைப் பெறுவதற்கு உரித்துடையவராவார்.தொழிலாளர் தன்னுடைய மாத சம்பளத்தை இலங்கைக்கு அனுப்புவதற்காக முதலாளி உதவிசெய்தல் வேண்டும்.  ஒப்பந்தத்தை  அதன் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகளின்படி இருசாராரும் முடிவுறுத்தலாம். சில வகையான நிபந்தனைகளின்படி, தொழில் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான உரித்து தொழிலாளிக்கு  உண்டு. மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்காக தொழிலாளர்  எந்தவித முன்னறிவித்தல்களுமின்றி ஒப்பந்தத்தை  முடிவுறுத்தலாம்.

1994

இலங்கை வெளிநாட்டுவேலை வாய்ப்புப் பணியக (திருத்தச்) சட்டம் (இல. 4)

 

இந்தத் திருத்தமானது வேலைவாய்ப்பு  வகையைப் பொறுத்து ஆட்சேர்ப்பு சேவைகளுக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை வேறுபடுத்துவதற்கான முறையொன்றை அறிமுகப்படுத்துகின்றது.  அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் (70 சதவீதம்), நலன்புரி நிதியம் (10 சதவிதம்)மற்றும்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (20 சதவீதம்) இடையே செலுத்திய கட்டணங்களை மீளத் தொடங்குவதற்காகவும் தீர்மானிக்கின்றது.  அடிப்படை சட்டத்திற்கு எதிராக மேற்கொள்கின்ற குற்றங்களுக்கான தண்டப் பணத்தொகை கணிசமானளவு  அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விதிப்பதற்கு இயலுமான தடைகளை பொதுவாக நீடிக்கப்பட்டுள்ளது.

2008

 

 

தேசிய தொழிலாளர் புலம்பெயர்வுக் கொள்கை

இந்தக்கொள்கை 2008 இல் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சகல ஆண்கள் மற்றும் பெண்கள்  புலம்பெயர்வதற்கான முன்னணி வாய்ப்புகளை வழங்குவதும், சுதந்திரமான, கௌரவமான, பாதுகாப்பான மற்றும் சமத்துவமான வினைத்திறன்மிக்க தொழில்புரிவதும் அதன் ஒட்டுமொத்த குறிக்கோளாகும். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் மற்றும் ஏனைய பொறிமுறைகளின் ஊடாக  ​தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க  பங்களிப்புகளை வழங்கி வருவதனை இந்தக் கொள்கையானது அங்கீகாரத்தை வழங்குகின்றது. அதனை ஏற்றுக்கொண்டது முதல், அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பதற்காக பல பொறிமுறைகள், வழிகாட்டல்கள், பயிற்சி செயலமர்வுகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன. உதாரணமாக 2013 இல் தொழிலாளர்கள் பயணித்த நாடுகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்களை மற்றும் இலங்கை இராஜதந்திர தூதுவராலயங்கள் வழங்கும் சேவைகளைக் கையாள்வதற்காக விரிவாக்கல் மற்றும் நெறிப்படுத்தல்களுக்கான ஒரு செயல்திட்ட கையேடு தயாரிக்கப்பட்டது.

2009


 

இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப்   பணியக (திருத்தச்) சட்டம் (இல. 56) 

 

அனுமதிப் பத்திரம் வழங்கல் மற்றும் கட்டணம் செலுத்துதல் உட்பட பல  திருத்தங்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக (திருத்தம்) அடிப்படைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

2012

 

இலங்கை தேசிய புலம்பெயர் சுகாதார கொள்கை

 

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின்  மற்றும் அவர்களின் குடும்பங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் சுகாதார அமைச்சினால் இலங்கை தேசிய புலம்பெயர் சுகாதார கொள்கையானது விருத்தி செய்யப்பட்டது.

மூலம்; நோர்ம்லெக்ஸ்,இலங்கைசுகாதார அமைச்சு