புலம்பெயர் தொழிலாளர்களின் முக்கியமான  மூலாதாரமொன்றாக இலங்கை அமைந்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போக்கு கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர் என்று அண்மைக்கால மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. அதேவேளை ஆண்டறிக்கையின்படி சுமார் 200,000 பேர் வெளயேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இது சம்பந்தமாக, அண்மைக்காலத்தில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெண்தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். (உதாரணம் 2012 இல் 138,312 முதல் 2015 இல் 90,677 வரையாகும்.) புலம்பெயர் தொழிலாளர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருசாராருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் (கட்டார், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான்...) ஒரு முக்கியமான இடமாக ​அமைந்துள்ளன. ​ பெண்கள் 35 - 39 ஆண்டுகளும், ஆண்கள் 25 - 39 ஆண்டுகளும் புலம்பெயர்வதற்கு மிகவும் பொதுவான வயதுக் குழுவாக அமைந்துள்ளது. ஏனெனில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பல, வீட்டுப் பணியாக  அமைந்துள்ளன. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களில் அதிகமான பங்களிப்பு கிடைப்பது  இளம் பெண்களாக வேலைசெய்யும் வீட்டுப் பணிப் பெண்களினாலாகும். இலங்கையர்கள் வெளிநாட்டில் பொதுவாக விமான நிறுவனங்கள்  அல்லது விருந்தோம்பல் மற்றும் வங்கித்  தொழில் துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.

 

வெளிநாட்டுத் தொழில்களின் முக்கியத்துவம், மற்றும் தொழிலாளர் சுரண்டல்களுடன் தொடர்புடைய ஆபத்துகளையும் பற்றி உணரப்பட்டமை காரணமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (இ.வெ.வே.ப) தொழில் அமைச்சின் கீழ் 1985 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பணிநோக்கமாக “மக்களுக்கஞ பயனளிக்கின்ற வகையில் வினைத்திறன்மிக்க  மற்றும் சமத்துவமான வழிவகைகளை உருவாக்கி அவர்களின்  திறன்களைக்கொண்டு வெளிநாட்டு தொழிற் சந்தைகளில் சகல தரப்பினர்களுடையதும் விருப்பங்களுக்கேற்ப பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தலாகும்.” இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஆட்சேர்த்தலில் ஒழுங்குபடுத்துகின்ற அரச நிறுவனமாக அமைந்துள்ளது. உள்நாட்டு ஆட்சேர்ப்பு முகவர்களின் நெறிமுறைகளை உறுதிசெய்வதற்கான முக்கியமான பங்களிப்பு இ.வெ.வே.ப இற்கு உண்டு. சர்வதேச புலம்பெயர் தொழில்களில் ஈடுபடுகின்ற ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இருக்கின்ற பெண் வீட்டுப் பணியாளர்கள் வெளி​யேறுவதைத் தடுக்கின்ற புதிய சட்ட ஒழுங்​கினை 2013 இல் (அதாவது குடும்ப பின்னணி அறிக்கை) உருவாக்கப்பட்டது. இந்த முன்னேற்றங்கள் சர்ச்சைக்குரியவையாகும். ஏனெனில் பெண்கள் கட்டுப்பாடுகளை மீறுகின்ற சந்தர்ப்பங்களில் அவை பாதுகாப்பற்ற புலம்பெயர்வாக (அதேபோல சுரண்டல்களும் முதலாளிமார்களினால் ஒப்பந்தங்கள் மீறப்படுவதும்) அமையலாம்.

அரசாங்கத்தின் நிபந்தனைகள் மற்றும் ஆட்சேர்ப்பு செயன்முறையை ஒழுங்கு முறைப்படுத்தும் முயற்சிகள் இருந்தபோதிலும் பலவேறு வழிமுறைகளினாலும் ஆட்சேர்ப்போரினால் வருங்கால புலம்பெயர் தொழிலாளர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகி பாதிக்கப்படக்கூடிய நிலைமை இன்னும் உள்ளது. முதலாவதாக, ஆட்சேர்ப்பு செயன்முறை சிக்கலானது, நீண்டது, புரிந்துகொள்வது கடினம். குறிப்பாக குறைவான திறன்களையுடைய புலம்பெயர் தொழிலாளர்கள். இது சம்பந்தமாக துணை முகவர்களை ஆட்சேர்க்கும்போது ஆட்சேர்ப்பு மற்றும் வேலையிலீடுபடுத்தும் கட்டணங்கள் பெரும்பாலும் அதிகமான மற்றும் ​இ.வெ.வே.ப இனால் வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேல் அறவிடப்படுகின்றது. இது குறிப்பிட்ட புலம்பெயர்வோரை அவர்களை ஆட்சேர்ப்புகளுடன் தொடர்புடைய கடன் சுமை தீர்க்கப்படும் வரை சுரண்டுவதற்குக் காரணமாக  அமைந்துள்ளது.  உதாரணமாக ஆட்சேர்த்தல்களுடன் தொடர்புடைய கடன்களை செலுத்தி முடியும்வரை முதலாளிமார் சம்பளத்தைக் குறைத்தல் அல்லது நிறுத்திவைக்கின்ற அறிக்கைகள் உண்டு. துரதிஷ்டவசமாக எழுத்துமூல ஒப்பந்தத்தில்  கடன் அளவு மற்றும் திருப்பிச் செலுத்துதல் பற்றிய விளக்கம் தெளிவாகத் தெரிவதில்லை. புலம்பெயர் தொழிலாளர் வெளிநாட்டில் இருக்கும் வரை நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதிப்புகளுக்கு காரணமாக அமையலாம். மேலும் சில இலங்கை ஆட்சேர்ப்பு முகவர்களினால் உடல்நலம் மற்றும் புத்தி குறைவான அங்கவீனர்களையும் பணத்திற்காக ஆட்சேர்ப்பு செய்துள்ளனர்.  நாடுகளில் வீட்டுப் பணியாளர்களுக்கு அதிகமான கேள்வி இருப்பதால் இந்நிலையை  அவதானிக்க முடிந்தது.  இலங்கைப் பணிப்பெண்கள் புறப்படுகின்றபோது குறித்த முதலாளிமார்களினால் ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றைப் (மூன்று தொடக்கம் ஏழு மாதங்கள் வரையான சம்பளத் தொகை) பெறுகின்றனர். இது கவலைக்குரிய நிலையாகும். ஏனெனில் அது பெண்களின் விருப்பத்திறக்கு எதிராக தூண்டுவதாக  அமைந்துள்ளது.​

 

வெ​ளிநாட்டில் இருக்கும்போது தொழில் ஒப்பந்தங்களுக்கேற்ப ஆட்சேர்ப்பு முகவர்கள் முழுமையான தகவல்களை வழங்குவதில்லை. (உதாரணம்; சம்பளம், வேலை நேரம்) மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிக்கைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்போது கடினமான நிலைமைகளில் குறித்த புலம்பெயர் தொழிலாளியின் சம்பளத்தை நிறுத்திவைக்கும்போக்கு ஆட்சேர்ப்பு முகவர்களிடையே சாதாரணமானதாக அமைந்திருக்கவி​ல்லை. எவ்வாறாயினும் அனுமதிபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கான நெறிமுறைக் கோட்பாட்டினை அமுல்படுத்தும்போது முகவர்கள் அதில் குறிப்பிடப்படுகின்றவாறு முறைகேடுகளுக்கெதிராகப் போராடுதல், தவறான புரிதல்கள், மற்றும் நெறிமுறை தவறிய நடத்தைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்பாராத பாதகமான சூழ்நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக; சில ஆட்சேர்ப்பு முகவர்கள் ‘இரட்டை ஒப்பந்தம்’ முறைமையைப் பின்பற்றுகின்றனர். எவ்வாறாயினும் தொழிலாளர்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களை அழைக்கின்ற நாடுகளுக்குப் பயணிக்கின்றனர். இது அவர்களின் முதலாளிமார் வித்தியாசமான விதிமுறைகளுடன் கூடியதாக பிறிதொரு ஒப்பந்தத்தை பயன்படித்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அனுமதிப் பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர்களின் சங்கம் (அ.வெ.வே.மு.ச-ALFEA) இல் அங்கத்துவம் பெறுவது கட்டாயமில்லை. அதன் அர்த்தம் என்னவெனில் இலங்கையிலும் புலம்பெயர்கின்ற நாடுகளிலும் அதிகமான தனியார்​துறை ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துணை முகவர்கள் என்றும் தொடர்புகொள்ள முடிவதில்லை. முறைசாரா துணை முகவர்கள் இலஞ்சம் (உதாரணம்; ஊழல், போலி ஆவணங்கள்) புலம்பெயர் தொழிலாளர்களை ஆட்கடத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடுவதாக அறிவிக்கப்படுகின்றது. இறுதியாக வீட்டுப் பணிப் பெண்கள் புறப்படுவதற்கு முன்னர் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்படி ஆட்சேர்ப்பு முகவர்களினால் கட்டளையிடப்படுவதாகவும் ஆட்சேர்ப்பு செயன்முறையின்போது மற்றும் வெளிநாட்டில் இருக்கும்போது பாலியல் துஷ்பியோகம் இடம்பெறுவதற்கு இடமுண்டு என்று அறிவிக்கப்படுகின்றது. இவ்வாறான முறைகேடுகள் இருந்தபோதிலும் ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் துணை முகவர்கள் வழக்குகள் அல்லது தண்டனைக்குரிய சேதங்களை மாத்திரம் எதிர்கொள்கின்றனர்.

 

ITUC உலகளாவிய உரிமைகள் குறிகாட்டியை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் தொழிலாளர் உரிமைகளுக்கான உலகளாவிய அந்தஸ்துகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் இங்கே.