தொழிலாளர்களின் கதைகள் மற்றும் உரிமை மீறல்கள்

வாக்குறுதி மீறல் மற்றும் ஆள்மாறாட்டம் – எமது புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம்
வெளிநாட்டில் மதமொன்றுக்கு ஐ.அ.டொ.400 சம்பளத்திற்கு தொழில் பெற்றுக்கொள்ளலாம் என்று எமது கிராமத்தில் உள்ள ஆட்சேர்ப்பு முகவர் ஒன்று தகவல் வழங்கியிருந்தது. ஒரு கிழமைக்கு ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலங்கள் அடிப்படையில் நாங்கள் கடதாசி ஆலையில் வேலைசெய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆட்சேர்ப்புக் கட்டணம் அறிவிடப்படாது என்றும், அதனை சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம் என்றும் முகவர் அறிவித்தார்.
நாம் புறப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர், நாம் எமது பயணத்திற்கு எமது பயணத்திற்கு முன்னைய திசைமுகப்படுத்தலுக்காக தலைநகருக்கு சென்றோம். நாம் எமது தொழில் ஒப்பந்தம் சம்பந்தமாக முகவரிடம் விசாரித்தோம், அதனைப் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை புறப்படுவதற்கு முன்னர் அதனை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
விமானநிலையத்தில், நாம் புறப்படுகின்ற தினத்தில், ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டோம். முகவர் வாக்குறுதியளித்த விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. ஒப்பந்தத்தில் சம்பளம் ஐ.அ.டொ.200 ஆகும். ஆட்சேர்ப்புக் கட்டணமாக ஐ.அ.டொ.100 இற்காக எமக்கு வழங்கிய பற்றுச்சீட்டு தற்போது எம்மிடம் உண்டு.
நாம் எப்படி ஆச்சர்யப்பட்டிருப்போம் பாருங்கள், விமானநிலையத்தில் மற்றும் செல்வதற்கு தயாராகும்போது எம்மால் எதுவுமே செய்ய முடியாதிருந்தது. எமது புதிய தொழில் மூலம் உதவிசெய்யலாம் என்ற நம்பிக்கை எமது குடும்பத்தினர்க்கு இருந்தது.
நீண்டதூர விமானப் பயணத்தின் பிற்பாடு, எமது புதிய தொழிலுக்கு வந்தபோது, பிறிதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், புதிய ஒப்பந்தத்தை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கவேண்டி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாம் மாதமொன்றிற்கு ஐ.அ.டொ.200 சம்பளத்தில் குழாய் தயாரிப்பு நிறுவனமொன்றில் வேலைசெய்வதற்காக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின் பிரதியொன்றை எமக்கு வழங்கப்படவில்லை, அத்துடன் முதலாளி எமது கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார்.
குழாய் தயாரிப்பு கம்பனியில் ​வேலை செய்தமையால் நாம் முதுகுவலி மற்றும் சுகாதார கஷ்டங்களை எதிர்கொண்டோம். மேலதிகநேர கொடுப்பனவுகளின்றி 10 – 12 மணித்தியாலங்கள் நாம் வேலைசெய்தோம். முதல் ஆறு மாதங்கள், எமது முழுச் சம்பளத்தையும் ஆட்சேர்ப்புக் கட்டணத்திற்காக அறவிட்டுக்கொள்ளப்பட்டது.
நாம் ஏழு மாதங்கள் வேலை செய்த பின்னர் முதலாவது காசோலையைப் பெற்றுக்கொண்டோம். ஆனால் அது ஐ.அ.டொ.100 மாத்திரமேயாகும். ஒப்பந்தப்படி எமது சம்பளத்திலிலிருந்து பாதியை மாத்திரம் ஏன் பெற்றோம் என்று முதலாளியிடம் நாம் கேட்டோம். அது எமக்கான தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளுக்காக சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
எமக்கு அதிகாரமில்லை – நாம் மாற்றங்களை செய்வதற்காக கேட்கப்பட்டோம், நாம் வேலை செய்வதை புறக்கணித்தால் திருப்பியனுப்பப்படுவோம் என்று அச்சுறுத்தப்பட்டோம்.
இறுதியாக, நாம் எமது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு புலம்பெயர் நிறுவனமொன்றின் உதவியைப் பெற்றுக்கொடுக்கும்படி கோரினோம். தொழில் திணைக்களத்தில் வழக்கொன்றைத் தொடுப்பதற்காக அந்த நிறுவனம் எமக்கு உதவி செய்தது. குறித்த சம்பளத்தை நாம் அவர்களின் ஒத்துழைப்புடன் பெற்றுக்கொள்ள முடிந்தது.
Migrant workers reporting their case to migrant rights organisation to seek foe help
Migrant workers filed their complaint about their recruitment process to a local union.
ஆட்சேர்ப்பு ஆலோசகரை நான் நாடியிருந்தால், எனக்கு முகவர் மற்றும் முதலாளி மற்றும் அவர்கள் எவ்வாறு தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்வர் என்பதைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடிந்திருக்கும்.
ஏனைய தொழிலாளர்களுக்கு எனக்கு நடந்ததைப் போன்று ஒருபோதும் இடம்பெறக்கூடாது.
உங்களுடைய உரிமைகளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்காக புலம்பெயர் ஆட்சேர்ப்பு ஆலோசகரை நாடவும்.
ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றமொன்றில் இந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டதுடன் ஹம்சா முறைப்பாட்டு பொறிமுறையினூடாக (Hamsa Complaint mechanism) ஆவணப்படுத்தப்பட்டது. ஆட்சேர்த்தல் செயன்முறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை அறிவிப்பதற்காக ஹம்சா புலம்பெயர் தொழிலாளர்களை அனுமதிக்கின்றது. முறைப்பாட்டை செய்த புலம்பெயர் தொழிலாளர்களை ஆசியா மற்றும் ஒன்றிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் மன்றம் ஒன்றிற்கு அனுப்பிவைப்பதற்கும் அவற்றின் அங்கத்தவர்களை சந்திக்கவும் செய்யப்படுவர். தொழிலாளர்களினைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைப் பேணி கட்டமைக்கப்படும். ஆனால் தகவல்கள் அவ்வாறே இருக்கச் செய்யப்படும்.
சர்வதேச தொழிற்சங்க கூட்டாண்மை மற்றும் ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றம் என்பன புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நியாயமான ஆட்சேர்த்தலை ஊக்குவிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் வெளிநாட்டில் தொழில் தேடுபவர்களுக்கு தொழிலாளர்களின் முன்னைய அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
• ஆட்சேர்ப்பு முகவர் பற்றிய அனுபவங்களை நீங்கள் பகிரலாம்.
• உங்களுடைய முகவரை தரப்படுத்தல்.
• உங்களுடைய உரிமைகளை அறிந்துகொள்ளல்.
• உதவியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை கண்டுகொள்ளலாம்.

உணவின்றி முடக்கிவைத்தல்
நான் செய்த அதே தவறை செய்யாதீர்கள் – உங்களுடைய முகவர் அல்லது வருங்கால முதலாளி பற்றி மேலதிகமாக அறிந்துகொள்வதற்காக ஆட்சேர்ப்பு ஆலோசகரை பரீட்சிக்கவும்
என்னுடைய குடும்பத்திற்கு உதவிசெய்வதற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க நான் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும்.
நான் வசிக்கின்ற இடத்தில் ஒருசில தொழில்களே இருக்கின்றன. அத்துடன் எனது ஊரில் அதிகமான குடும்பங்களின் உறவினர்கள் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர் மற்றும் உதவியும் செய்கின்றனர்.
மாதமொன்றிற்கு ஐ.அ.டொ.300 சம்பளத்திற்கு ஒரு பூங்காவன தொழிலாளர் ஒருவருக்கான வேலை இருப்பதாக எனது அயலவர் ஒருவர் கூறினார். அந்த தொழில் கஷ்டமில்லை என்றும் அதன் மூலம் குடும்பத்திற்கு போதுமான அளவு பணத்தை அனுப்பலாம் என்றும் எனக்கு சொன்னார்கள்.
இந்த வேலை வாக்குறுதிக்காக நான் ஐ.அ.டொ.600 ஐ முகவர்க்கு செலுத்தினேன்.
நான் விடுமுறையில் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், முகவரிடம் என்னுடைய தொழில் ஒப்பந்தம் மற்றும் வேலை அனுமதிப்பத்திரத்தைக் கேட்டேன் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று என்னுடைய தொழிலைப் பாதிக்குமா என்று நான் கேட்டேன். கொரோனா வைரஸ் தொற்று பற்றி செய்தியில் அறிந்துகொண்டேன். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முகவர் தெரிவித்தார். நான் புறப்படுவதற்கு சற்று முன்னர் அங்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.
நான் புறப்பட்ட தினத்தில், ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடும்படி கோரப்பட்டேன், ஆனால் எனது மாத சம்பளம் ஐ.அ.டொ.200 என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கு அதில் கையெழுத்திடுவதற்குத் தேவையிருக்கவில்லை, ஆனால் நான் அதனை செய்யவேண்டியிருந்தது. ஏனெனில் நான் ஏற்கனவே ஐ.அ.டொ.600 முகவர்க்கு செலுத்தியிருந்தேன். ஆட்சேர்ப்புக் கட்டணத்துக்கான பற்றுச்சீட்டை முகவரிடம் கேட்டேன் மற்றும் அதற்காக ஐ.அ.டொ.100 இற்கான பற்றுச்சீட்டைப் பெற்றேன். அது எனது நாட்டில் அதிகளவு அனுமதிக்கப்பட்ட கட்டணமாகும்.
நான் எனது இடத்திற்கு திரும்பி வந்தபோது, மற்றுமொரு முகவர் என்னை சந்தித்து புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடும்படி கேட்கப்பட்டேன். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் பிரதியொன்றை எனக்கு கொடுக்கவில்லை, மற்றும் எனது கடவுச்சீட்டை எனது முதலாளி எடுத்துக்கொண்டார்.
நான் வேலைத்தளத்தினைச் சென்றடைந்தேன், அப்போதுதான் உணர்ந்துகொண்டேன் அது கட்டுமானத்துறையே அன்றி பூங்காவனம் அல்ல. நான் ஒருநாளைக்கு 12 மணித்தியாலங்கள் வரையில் வேலை செய்ய வேண்டியதுடன் கொடுப்பனவும் செய்யப்படவில்லை
எனக்கு சரியான தங்குமிடமும் இருக்கவில்லை மற்றும் கட்டுமானத்துறைக்கு அருகில் 15 நபர்களுடன் சேர்ந்து தங்கவேண்டியிருந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிற்பாடு, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியமையால் கட்டுமானத்துறையை நிறுத்தும்படி எமக்கு சொல்லப்பட்டது.
மூன்று கிழமைகளுக்கு எமது தங்குமிடங்களை விட்டும் விலகிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை, மற்றும் கம்பனி எமக்கு உணவு வழங்குவதை நிறுத்தியமையால் துன்பத்திற்காளானோம்.
தனிமைப்படுத்தலை மீறியமைக்காக பொலிஸ் எம்மைக் கைதுசெய்யும் என்ற காரணத்திற்காக, எமக்கு உணவு பெறுவதற்கு வெளியில் செல்ல முடியவில்லை.
எமது நிலைமையை கருத்திற்கொண்டு முகநூலில் புகைப்படங்களைப் பதிவிட்டு உதவி கோரினோம்.
Migrant workers from different origin countries about to return home after seeking help for repatriation
Migrant workers from different origin countries were waiting for the repatriation process

ஆட்சேர்ப்பு ஆலோசகரை நான் நாடியிருந்தால், எனக்கு முகவர் மற்றும் முதலாளி மற்றும் அவர்கள் எவ்வாறு தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்வர் என்பதைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடிந்திருக்கும்.
ஏனைய தொழிலாளர்களுக்கு எனக்கு நடந்ததைப் போன்று ஒருபோதும் இடம்பெறக்கூடாது.
உங்களுடைய உரிமைகளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்காக புலம்பெயர் ஆட்சேர்ப்பு ஆலோசகரை நாடவும்.
ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றமொன்றில் இந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டதுடன் ஹம்சா முறைப்பாட்டு பொறிமுறையினூடாக (Hamsa Complaint mechanism) ஆவணப்படுத்தப்பட்டது. ஆட்சேர்த்தல் செயன்முறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை அறிவிப்பதற்காக ஹம்சா புலம்பெயர் தொழிலாளர்களை அனுமதிக்கின்றது. முறைப்பாட்டை செய்த புலம்பெயர் தொழிலாளர்களை ஆசியா மற்றும் ஒன்றிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் மன்றம் ஒன்றிற்கு அனுப்பிவைப்பதற்கும் அவற்றின் அங்கத்தவர்களை சந்திக்கவும் செய்யப்படுவர். தொழிலாளர்களினைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைப் பேணி கட்டமைக்கப்படும். ஆனால் தகவல்கள் அவ்வாறே இருக்கச் செய்யப்படும்.
சர்வதேச தொழிற்சங்க கூட்டாண்மை மற்றும் ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றம் என்பன புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நியாயமான ஆட்சேர்த்தலை ஊக்குவிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் வெளிநாட்டில் தொழில் தேடுபவர்களுக்கு தொழிலாளர்களின் முன்னைய அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
• ஆட்சேர்ப்பு முகவர் பற்றிய அனுபவங்களை நீங்கள் பகிரலாம்.
• உங்களுடைய முகவரை தரப்படுத்தல்.
• உங்களுடைய உரிமைகளை அறிந்துகொள்ளல்.
• உதவியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை கண்டுகொள்ளலாம்.

Woman migrant domestic worker filling in a complaint form
Migrant domestic worked filed a complaint to a local organisation about her recruitment agency and employer.

தனிமைப்படுத்தப்படல், பட்டினி கிடத்தல் மற்றும் தாக்கப்படல்
 
எனது கணவர் ஒரு குருடர், ஆகவே நான் மாத்திரம்தான் எனது குடும்பத்தில் வேலைசெய்ய இயலுமான ஒரே நபர். அத்துடன் எனது குடும்பத்திற்கு உதவி செய்வதற்குப் போதுமானளவு உழைப்பதற்கு எனது சொந்த நாட்டில் இயலாது.
நான் ஒரு சுத்திகரிப்பாளராக வேலைபார்த்தேன், ஒரு வாரத்திற்கு வீடுகளுக்கு மூன்று தடவைகள் செல்வேன் மற்றும் இரண்டு குடும்பங்களுக்கு துவைத்துக் கொடுப்பேன். நான் நீண்ட மணித்தியாலங்கள் வேலை செய்தேன், ஆனால் இன்னும் என்னுடைய குடும்பத்திற்கு அதிகம் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
பிற்பாடு எமது ஊரில் அயலில் உள்ள ஒரு தரகர் இருப்பதை நான் அறிந்துகொண்டேன். அவர் வெளிநாட்டில் தொழில் தேடுவதற்காக சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்துவந்தார்.
அந்தக் தரகர் எனக்கு ஐ.அ.டொ.300 சம்பளத்திற்கு ஒரு தொழில் தருவதாக வாக்குறுதியளித்தார். அது எனது வீட்டிற்குப் பணம் அனுப்புவதற்கு போதுமானதாக இருந்தது, ஆனால் நான் ஆட்சேர்ப்புக் கட்டணமாக ஐ.அ.டொ.750 ஐ செலுத்தவேண்டியிருந்தது. அந்தக் கட்டணம் வீசா, விமானப் பயணம், மருத்துவ பரிசோதனை மற்றும் பயிற்சிக்காக செலுத்தப்படும் என்று தரகர் தெரிவித்தார்.
அந்தக் கட்டணத்துக்கான பணத்தைப் பெறுவதற்காக, எமது சிறிய தோட்டத்தை ஈடு வைக்க வேண்டியிருந்தது.
நான் கட்டணத்தைச் செலுத்தினேன், அத்துடன் மூன்று மாதங்களுக்குள் நான் வெளியேறிச் செல்வேன் என்றும் தெரிவிக்கப்பட்டது. நான் கடவுச்சீட்டொன்றைப் பெற்றேன், எனக்கு மருத்துவ பரிசோதனையொன்றும் நடைபெற்றது, ஆனால் அங்கே எந்தவொரு பயிற்சியோ அல்லது புறப்படுவதற்கு முன்னர் திசைமுகப்படுத்தலோ இடம்பெறவில்லை.
நான் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தலைநகருக்குச் சென்று ஆட்சேர்ப்பு முகவர் நிலையத்தின் அலுவலகத்தில் தங்கியிருந்தேன். அந்த அலுவலகத்தில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி கோரப்பட்டேன். அதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் அது நான் அறியாத மொழியொன்றாக இருந்தமையாலாகும்.
நான் ஏனைய பெண்களுடன் பயணித்தேன் அவர்கள் அனைவரும் பணிப்பெண்களாகும். நாம் அடுத்த நாட்டுக்குள் வருகைதந்தவுடன், நேரடியாக நாம் வேலை செய்யவிருக்கின்ற வீட்டுக்கு சென்றோம். எந்தவொரு பயிற்சியோ அல்லது திசைமுகப்படுத்தல்களோ இடம்பெறவில்லை.
நான் செய்யவிருந்த வேலையிலிருந்து என்னை முற்றாகவே வெளியேற்றியிருந்தது. நான் மூன்று வெவ்வேறு வீடுகளில், அந்தக் குடும்பங்களுக்கு தினமும் பதினைந்து மணித்தியாலங்கள் சமையல் மற்றும் சலவை வேலை செய்தேன். நான் ஒருபோதும் ஒருநாள் விடுமுறை கூட பெறவில்லை மற்றும் எனது குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்காக கைப்பேசியை பாவிப்பதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலைமை மூன்று மாதங்கள் தொடர்ந்ததுடன், அது மோசமான நிலையை ஏற்படுத்தியது, எனக்கு கொடுப்பனவும் செய்யப்படவில்லை. நான்காவது மாதத்தில் நான், மூன்று வீடுகளில் வேலை செய்வது மிகவும் கடினமானதாகையால், முதலாளியிடம் என்னை இடமாற்றம் செய்யும்படி கேட்டேன்.;
அதன் பிற்பாடு உடல்சார் துஷ்பிரயோகம் ஆரம்பமானது. என்னை புதிய முதலாளியிடம் இடம் மாற்றப்பட்டது. அவர் என்னை அடித்தார், எனக்கு மிகக் குறைந்த உணவையே வழங்கினார், நான் இதுவரை நீண்ட நாட்களாக ஓய்வின்றி பல மணிநேரம் வேலை செய்துவருகின்றேன்.
ஐந்து மாதங்களின் பிற்பாடு எனக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. எனக்கு ஐ.அ.டொ.150 மாத்திரமே கொடுக்கப்பட்டது. ஆகவே நான் திகைப்படைந்தேன்; ஆட்சேர்ப்பு முகவருடன் ஒப்பந்தம் செய்தபடியே வழங்கப்படுவதாக முதலாளி அறிவித்தார்.
வருகைதந்து பத்து மாதங்களின் பிற்பாடு, நான் நம்பிக்கையிழந்து மற்றும் அச்சத்துடனிருந்தேன். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நிறுவனமொன்றுடன் தொடர்புகொண்டேன். துஷ்பிரயோகத்திற்கெதிராக இனிமேலும் என்னால் எழுந்துநிற்க முடியவில்லை. நான் மெலிந்து, பட்டினிகிடந்து மற்றும் என்னுடைய முதுகிலும் கைகளிலும் காயங்களும் இருந்தன.

ஆட்சேர்ப்பு ஆலோசகரை நான் நாடியிருந்தால், எனக்கு முகவர் மற்றும் முதலாளி மற்றும் அவர்கள் எவ்வாறு தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்வர் என்பதைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடிந்திருக்கும்.
ஏனைய தொழிலாளர்களுக்கு எனக்கு நடந்ததைப் போன்று ஒருபோதும் இடம்பெறக்கூடாது.
உங்களுடைய உரிமைகளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்காக புலம்பெயர் ஆட்சேர்ப்பு ஆலோசகரை நாடவும்.
ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றமொன்றில் இந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டதுடன் ஹம்சா முறைப்பாட்டு பொறிமுறையினூடாக (Hamsa Complaint mechanism) ஆவணப்படுத்தப்பட்டது. ஆட்சேர்த்தல் செயன்முறையில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை அறிவிப்பதற்காக ஹம்சா புலம்பெயர் தொழிலாளர்களை அனுமதிக்கின்றது. முறைப்பாட்டை செய்த புலம்பெயர் தொழிலாளர்களை ஆசியா மற்றும் ஒன்றிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் மன்றம் ஒன்றிற்கு அனுப்பிவைப்பதற்கும் அவற்றின் அங்கத்தவர்களை சந்திக்கவும் செய்யப்படுவர். தொழிலாளர்களினைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைப் பேணி கட்டமைக்கப்படும். ஆனால் தகவல்கள் அவ்வாறே இருக்கச் செய்யப்படும்.
சர்வதேச தொழிற்சங்க கூட்டாண்மை மற்றும் ஆசியாவில் புலம்பெயர்ந்தோர் மன்றம் என்பன புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நியாயமான ஆட்சேர்த்தலை ஊக்குவிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் வெளிநாட்டில் தொழில் தேடுபவர்களுக்கு தொழிலாளர்களின் முன்னைய அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
• ஆட்சேர்ப்பு முகவர் பற்றிய அனுபவங்களை நீங்கள் பகிரலாம்.
• உங்களுடைய முகவரை தரப்படுத்தல்.
• உங்களுடைய உரிமைகளை அறிந்துகொள்ளல்.
• உதவியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை கண்டுகொள்ளலாம்.

Migrant Forum in Asia (MFA)

Conceived in 1990 in a meeting of migrant workers’ advocates in Hong Kong, MFA was formally organized in 1994 in a forum held in Taiwan entitled, “Living and Working Together with Migrants in Asia”.

MFA is a regional network of non-government organizations (NGOs), associations and trade unions of migrant workers, and individual advocates in Asia who are committed to protect and promote the rights and welfare of migrant workers.

http://mfasia.org

International Trade Union Confederation (ITUC)

The International Trade Union Confederation (ITUC) is the global voice of the world’s working people.

The ITUC’s primary mission is the promotion and defence of workers’ rights and interests, through international cooperation between trade unions, global campaigning and advocacy within the major global institutions.

https://www.ituc-csi.org